சோம்நாத் கீதா மந்திர்

சோம்நாத் கீதா மந்திர்
Updated on: 
2 min read

குஜராத் மாநிலம் ஸ்ரீ சோமநாதர் கோயிலுக்கு 2 கிமீ தொலைவில் ஹிரண்யா, கபிலா, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி காட் கரையில் சோம்நாத் கீதா கோயில் அமைந்துள்ளது.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு 700 ஸ்லோகங்களில் 18 அத்தியாயங்களில் பகவத்கீதையை அருளனார். கர்மா, தர்மம், மனக்கட்டுப்பாடு, ஞானம், பக்தி முதலிய வாழ்வின் நன்னெறிகளை அனைவருக்கும் வழங்கினார்.

அவற்றை எழுதி வைத்தால் என்றென்றும் பயன்படுமே என யோசித்து தொழிலதிபர் பிர்லா குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டதுதான் சோம்நாத் பிர்லா கோயில்.

யாதவர்களின் அழிவுக்குப் பின் கிருஷ்ணரின் அண்ணன் பலராமர் தியானத்தில் ஒரு குகையில் அமர்ந்து தன் வாயிலிருந்து வெள்ளை நாகமாக உருவெடுத்து கடலுக்குள் சென்று மாயமானார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in