நிறைவான வாழ்க்கை

நிறைவான வாழ்க்கை
Updated on
2 min read

நமக்கு அனைத்தையும் அருள்வது இறைவன். அவன் கொடுக்க நினைப்பதை மனிதன் தடுக்க முடியாது. இறைவன் கொடுக்க மறுப்பதை மனிதனால் கொடுக்க முடியாது. இதை உணர்ந்து கொண்டு செயல்பட்டால், ஒவ்வொருவரும் நிறைவான வாழ்க்கை வாழலாம்.

யாக்கோபு உடல்நலம் இன்றி இருப்பது அவர் மகன் யோசேப்புக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் தன் இரு மைந்தர்களான மனாசேயையும் எப்ராயிமையும் அழைத்துக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றார். அவர் வந்தவுடன் யாக்கோபு பெரும் முயற்சி செய்து எழுந்து தன் கட்டில் மேல் அமர்ந்தார்.

இறைவன் கானான் நாட்டில் உள்ள ‘லூசு’ என்ற இடத்தில் எனக்குத் தோன்றி, ‘உன்னைத் திரளான மக்கள் கூட்டமாக்குவேன். உன் வழி மரபினருக்கும் இந்நாட்டை உடைமையாக்குவேன் என்றார். அதனால் உன் இரு மகன்களும் இவர்களுக்குப் பின் உனக்குப் பிறக்கும் புதல்வர்களும் உரிமையில் பங்கு பெறுவர்’ என்றார் யாக்கோபு.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in