புதுநெறி கண்ட புலவர்..! | நூல் அறிமுகம்

புதுநெறி கண்ட புலவர்..! | நூல் அறிமுகம்
Updated on: 
1 min read

சைவ அருளாளர்கள் நான்கு மார்க்கங் களைப் பற்றி பேசுகின்றனர். அவை தாச மார்க்கம் (சரியை) - எஜமான் - தாசன் என்ற தொண்டு நெறி (திருநாவுக்கரசர்), சத்புத்திர மார்க்கம் (கிரியை) - தந்தை - மகன் நெறி (திருஞானசம்பந்தர்), சக மார்க்கம் (யோகம்) - தோழமை நெறி (சுந்தரமூர்த்தி நாயனார்), சன்மார்க்கம் (ஞானம்) - அறிவு நெறி (மாணிக்கவாசகர்) ஆகும். சன்மார்க்க நெறியை மேலும் செப்பனிட்டவர் வள்ளலார்.

மாணிக்கவாசகருடைய சன்மார்க்கம் சமய சன்மார்க்கம் - சைவ சன்மார்க்கம். வள்ளலாருடைய சன்மார்க்கம் சுத்த சன்மார்க்கம் - சமயம் கடந்த சன்மார்க்கம். கடவுளது உண்மையும் நமது உண்மையும் ஒன்றாகவே உள்ளது என்பதை உணர்த்துவது தான் சன்மார்க்க கொள்கை. கடவுளும் நாமும், சர்க்கரையும் அதன் இனிப்பும் போல ஒன்றாகவே உள்ளோம் என்று உணர்த்துவது தான் சன்மார்க்கம்.

நமது தீய குணங்களை முற்றிலுமாக மாற்றி கடவுளின் நல்ல குணங்களாகிய எல்லையில்லா அன்பு, எல்லையில்லா கருணை, எல்லையில்லா இரக்கம், தயவு போன்றவற்றை நமது உள்ளத்தில் பூரணமாக வியாபித்திருக்க செய்தால் நமக்கு கடவுளின் அருள் கிடைக்கும்.

Loading content, please wait...

X