

ஒவ்வொருவருடைய மனநிலையும் ஒவ்வொரு கால கட்டத்தில் மாறும். சிலர் மட்டுமே யதார்த்தத்தையும் அடுத்தவர் மனநிலையையும் அறிந்து, எதற்காகவும் எதையும் விட்டுக் கொடுக்காமல், அதே சமயம் பாசத்தையும் மறக்காமல் இருப்பர். பைபிளின் பாதையில் யோசேப்பு, தந்தை மீதும், சகோதரர்கள் மீதும் வைத்துள்ள பாசத்தை அறிந்து கொள்வோம்.
நாடெங்கும் பஞ்சம் வந்த நேரம், யாக்கோபு (யோசேப்பின் தந்தை) எகிப்தில் தானியம் கிடைப்பதை அறிந்து தன் புதல்வர் களை அங்கே அனுப்பினார். யோசேப்பின் சகோதரர்களில் பென்யமினை மட்டும் யாக்கோபு தன்னோடு வைத்துக்கொண்டு மற்றவர்களை அனுப்பினார்.