கடன் தொல்லை தீர்க்கும் அரிமேயவிண்ணகரம் குடமாடு கூத்தன்

கடன் தொல்லை தீர்க்கும் அரிமேயவிண்ணகரம் குடமாடு கூத்தன்
Updated on
2 min read

சீர்காழியில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள திருநாங்கூரில் அமைந்துள்ள அரிமேய விண்ணகரம் குடமாடு கூத்தன் கோயில் கடன் தொல்லை நீக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து 26 கிமீ தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து 5 கிமீ தொலைவிலும் இத்தலம் உள்ளது.

மூலவர்: குடமாடு கூத்தன். தாயார்: அமிர்தவல்லி.

உதங்கர் முனிவர் வைதர் என்பவரிடம் வேதங்களை கற்று தேர்ந்ததும் தனது குருவுக்கு தட்சணை தர விரும்பினார். குருநாதரின் மனைவி, தனக்கு அந்நாட்டு அரசி அணிந்திருக்கும் குண்டலங்கள் வேண்டும் என்று கேட்டார். உதங்கர் அந்த நாட்டு மகாராஜாவின் மனைவியிடம் சென்று குண்டலங்களைக் கேட்டார். அவரைப் பற்றி அறிந்திருந்த மகாராணியாரும் குண்டலங்களைக் கொடுத்து விட்டார்.

அவற்றை எடுத்துக்கொண்டு குருகுலம் திரும்பியபோது பசியும், தாகமும் அவரை வாட்டியது. அப்போது அங்கு இடையன் தலையில் பானை ஒன்றை சுமந்தபடி ஆடிக்கொண்டே பசுக்களை ஓட்டிக்கொண்டு வந்தான். அவனருகே சென்ற உதங்கர் தன் தாகம் நீங்க பானையில் இருப்பதை தரும்படி கேட்டார். இடையன் பானையில் பசுவின் சாணமும், கோமியமும் இருப்பதாக சொன்னான். மேலும், இதைத்தான் குரு வைதரும் உண்டதாக கூறினான். குரு உண்ட பொருள் என்று சொன்ன உடனே உதங்கர் அதை வாங்கிக்கொண்டார்.

கமண்டலத்தை ஒரு மரத்தின் அடியில் வைத்துவிட்டு, அவர் அதனை பருகினார். அப்போது அவ்வழியே வந்த தட்சன் என்பவன் கமண்டலங்களை எடுத்துக்கொண்டு ஓடினான். உதங்கரும் அவனைத் துரத்திச்செல்ல அவன் ஒரு பொந்துக்குள் ஒளிந்து கொண்டான். உதங்கர் இடையனிடம், அவனிடம் இருந்து தன் கமண்டலங்களை மீட்க ஆலோனை கேட்டார்.

அப்போது அவ்வழியே மற்றொருவர் குதிரையில் வந்தார். குதிரைக்காரரைக் காட்டிய இடையன், அவருடன் சென்றால் கமண்டலங்களை மீட்க உதவி செய்வார் என்றான். குதிரையின் வாயில் இருந்து நெருப்பைக் கக்கச் செய்தார். நெருப்பின் உஷ்ணம் தாங்காத தட்சன் வெளியில் வந்து கமண்டலத்தை திருப்பி கொடுத்தான். இடையனுக்கும், குதிரை மீது வந்தவருக்கும் நன்றி சொல்லிவிட்டு குருகுலம் திரும்பினார் உதங்கர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in