

சோதனைகள் வந்தாலும், அவை நன்மைக்கே என்று நினைக்க வேண்டும். ஏதோ ஒரு விதத்தில் நாம் காப்பாற்றப்படுவோம், நாமும் வாழ்வில் எப்படியாவது முன்னேறுவோம் என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் இருந்தால், அதுவே வெற்றிக்கு வித்திடும்.
ஒரு வியாபாரி, பொருட்களை கழுதை மேல் ஏற்றிக் கொண்டு தன் ஊருக்கு அருகில் உள்ள சந்தைக்கு புறப்படுகிறார். சந்தையில் அனைத்து பொருட்களையும் விற்று, நல்ல லாபம் பார்க்கிறார். மகிழ்ச்சியில் திளைத்த வியாபாரி, அங்கு குறைந்த விலையில் உப்பு விற்கப்படுவதை அறிந்தார்.