

கர்னாடக இசையில் ஒலிக்கும் கிறிஸ்துவப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? கிறிஸ்துவ தேவாலயங்களில் மெல்லிசையில் முகிழ்ந்த பாடல்களும் மேற்கத்திய பாடல்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பாமாலைகளுமே பெரிதும் ஒலிக்கும். இதற்கு மாறாக முழுக்க முழுக்க கர்னாடக இசையில் கிறிஸ்துவ கீர்த்தனைகளைக் கொண்டே ஒரு முழு நேர கச்சேரியை நிகழ்த்திக் காட்டிய பெருமைக்கு உரியவர் டாக்டர் டி. சாமுவேல் ஜோசப்.
திரைப்பட இசையமைப்பாளர் ஷியாமாக இவரை நிறைய பேருக்குத் தெரியும். கர்னாடக இசையில் இவர் இசையமைத்த பாடல்களை ராகவேந்தரின் மகள் கல்பனா பாடியிருக்கிறார். அந்தக் கச்சேரியின் பதிவை ‘சத்யம் காஸ்பல்’ யூடியூபில் வெளியிட்டுள்ளது.
‘என் மீட்பர் உயிரோடு இருக்கையிலே
எனக்கென்ன குறை உண்டு நீ சொல் மனமே...’
- பாடல் உள்ளத்தை உருக்கும் கல்பனாவின் குரல் வளத்துடன் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
காணெலியில் காண: https://rb.gy/th090