

திருத்தலங்களை குடும்பத்தோடு சென்று தரிசிப்பது, பரிகாரங்களுக்காக செல்வது ஒரு விதம். ஆனால் அதையும் கடந்து இறை அருள் அனுபவத்துக்காக பெரிதும் தங்களை வருத்திக் கொண்டு செல்வதில் திருக்கைலாய யாத்திரை சென்றுவருவது எல்லாராலும் சாத்தியமான செயல் அல்ல.
நூலாசிரியரின் திருக்கைலாய யாத்திரைக்காக அவர் எடுத்துக்கொண்ட பயிற்சிகள், வகுத்த திட்டங்கள், ஏற்பட்ட அனுபவங்கள், யாத்திரை சென்ற குழுவினருக்கு ஏற்பட்ட சிலிர்ப்பூட்டும் சம்பவங்கள் பலவும் ஒன்றுவிடாமல் மிகவும் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
66 முறை திருக்கைலாய யாத்திரை சென்றுவந்திருக்கும் ஆனந்த் ஐயாவின் நிறைவான பேட்டி பல்வேறு தகவல்களை மிகவும் நேர்த்தியாக படிப்பவர்களின் இதயத்தில் பசுமையாக பதியவைக்கிறது. திடீரென்று, 16,000 அடி உயரம் சென்றால் அந்த தட்பவெப்ப நிலையை நம் உடல் தாங்காது. அதற்காகவே நேபாளம் வழியாக படிப்படியாக உயரத்தை கூட்டிக்கொண்டே பயணித்து திருக்கைலாயம் அடையும் உபாயத்தையும் அறிவியல்பூர்வமாக விவரிக்கிறது இந்நூல்.
திருக்கைலாய திருவலம் -
GE. இராமநாதன்,
YA பப்ளிகேஷன்,
தொடர்புக்கு: 98409 96745.