

திருப்பாவையில் ஆண்டாள் கூறிய பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள்) எளிமையானவை. அகத்தூய்மையால் இறைவனைச் சுலபமாக அடைய அனைவராலும் முடியும் என்கிற ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படைக் கருத்துகளை நமக்கு ஆண்டாள் அளித்துள்ளார். திருப்பாவையில் பக்தி மட்டுமல்லாது, பழக்கவழக்கங்கள், இயற்கை வர்ணனைகள், பறவைகளின் ஒலி, நகைச்சுவை, கிராமத்து வாழ்க்கை ஆகியனவும் கூறப்பட்டுள்ளன.
பூர்வாச்சார்யர்களின் உரைகளை அனுசரித்துச் சுருக்கமாக, எளிய உரையில் முப்பது நாள்களும் ஒவ்வொரு திருப்பாவைக்கும் பொதுப் பொருள், சிறப்புப் பொருள், குறிப்புப் பொருள் என்று அனைத்தையும் கூறியுள்ளார் ஆசிரியர்.
மேலும், ஒவ்வொரு விளக்கவுரையின் நிறைவிலும் ‘இதையும் அறிவோம்’ என்று திருப்பாவை தொடர்பான நிகழ்வைக் கதை வடிவிலும் கருத்து உருவிலும் சுவையாக, பழமையான தஞ்சாவூர் பாணியில் அமைந்த கோட்டோவியங்களை இணைத்துக் கூறியுள்ளது பாராட்டுக்குரியது.
ஸ்ரீ ஆண்டாள் அருளிய தித்திக்கும் திருப்பாவை எளிய உரை
புத்தக வடிவமைப்பு: சுஜாதா தேசிகன். ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை வெளியீடு.
தொடர்புக்கு: 9845866770. rdmctrust@gmail.com.