

ஆதிசங்கரரின் ‘காலடி’, திருச்செங்கோடு ‘அர்த்தநாரீஸ் வரர்’, சென்னை நகரத்தின் காரணப் பெயராக விளங்கும் ‘சென்ன கேசவர்’, திருப்பாற்கடல் ‘திரிமூர்த்தி’, தாய்லாந்தின் ‘ப்ராப்ரோம்’... இந்த ஆலயங்கள் எல்லா வற்றிலும் இருக்கும் ஓர் ஒற்றுமை, இந்த ஆலயங்களில் உறைந்திருக்கும் இரு ஆன்மிக அனுபவங்களின் சங்கமம்!
தான் கண்டுணர்ந்த காட்சிகளை, செய்தி களை ஆவணமாக இந்தப் புத்தகத்தில் ஆன்மிகக் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர் ஜி.எஸ்.எஸ். நாம் அடிக்கடி சென்றுவரும் கோயிலாக இருந்தாலும், ஒவ்வொரு கட்டுரையிலும் பொதிந்திருக்கும் சாராம்சங்கள், ‘அதில் இப்படியொரு விசேஷம் இருக்கிறதா?’ என்னும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
ஆன்மிகக் கட்டுரைகளை வெறும் தகவல் தோரணங்களாகத் தராமல், உள்ளார்ந்த புராண நம்பிக்கைகள், ஸ்தல புராணச் செய்திகள், பண்பாட்டுப் பெருமைகளோடு தந்திருப்பதில் நூலாசிரியரின் பரந்துபட்ட அனுபவம், இறை அனுபூதியைப் படிப்பவருக்கு தரிசனப்படுத்துகிறது.
ஒன்றில் இரண்டு
ஜி.எஸ்.எஸ்.
இந்து தமிழ் திசை.