

க.மனோகரன்;
தொடர்புக்கு: 9444979590.
இறைவனின் நாமங்களின் உட்பொருளை ஆராய்ந்து பார்க்கும் நூலாசிரியரின் கட்டுரைகள், தமிழின் சிறப்புகளையும் சொல்கின்றன. இறை நாமங்களிலிருந்து பிரிக்க முடியாத அளவுக்குத் தமிழோசை இறைவனின் நாமங்களில் தொனிப்பதை நுட்பமாக அருணகிரிநாதர் உள்ளிட்ட அருளாளர்களின் பாடல்களின் வழியாகவும் இந்த நூலில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
கிறித்துவம் தமிழுக்குத் தந்த அருட்கொடை;
முனைவர் ப.பாலசுப்பிரமணியன்;
சங்கர் பதிப்பகம், சென்னை. தொடர்புக்கு: 9444191256.
கிறித்துவ மதத்தைப் பரப்புவதற்காக வந்த மேல்நாட்டு அறிஞர்கள் தமிழுக்குச் செய்திருக்கும் அரிய பணிகளையும் சாதனைகளையும் விளக்கிக் கூறும் கட்டுரைகளின் தொகுப்பு. மதத்தைப் பரப்புவதற்காக வந்தவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு, தமிழில் எழுதப்பட்டிருக்கும் வளமான இலக்கியச் செல்வங்களை உலகம் அறிந்துகொள்ளும் வகையில் அவற்றை மொழிபெயர்த்தும் இருக்கின்றனர். உள்நாட்டு அறிஞர்களும் இலக்கியத்தின் துணைகொண்டு கிறித்துவ மதத்தை வளர்க்கும் படைப்புகளை எழுதிச் சிறப்பித்திருப்பதையும் அரிய பல தகவல்களின் கருவூலமாக இந்தச் சின்னஞ்சிறிய நூலில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.