

இறை அருளாளரும் சூபி சித்தருமான தக்கலை மகான் பீர்முஹம்மது அப்பா அருளிய ஞான ஆனந்தக் களிப்பின் 16 பாடல்களுக்கான விளக்கத்தைத் தனக்கே உரிய தமிழ் நடையோடும் இறை அனுபவத்தின் பெருமையை விளக்கும் வகையிலும் தொகுத்து அளித்துள்ளார் நூலாசிரியர். நபியின் சிறப்பையே உருவென்றும் குருவென்றும் பீர் அப்பா தம் பாடல்களில் எடுத்தாள்வதைத் தகுந்த ஆதாரங்களோடு பதிவுசெய்திருக்கிறது இந்நூல்.
ஆழிய ஞானம் 63: தக்கலை பீர்முஹம்மது அப்பா எழுதிய ஞான ரத்தின குறவஞ்சியின் 63 பாடல்களுக்கான விளக்கமாக நூலாசிரியர் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். மூலப் பாடல்களில் மிளிரும் கருத்தைச் சிந்தாமல் சிதறாமல் அதே நேரம் எளிமையாக இந்தத் தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் உதவும் வகையில் பண்டிதர் முதல் பாமரர் வரை அனைவருக்கும் புரியும் எழுத்து நடையில் பீரப்பாவின் உயர்ந்த சிந்தனைகளைப் பரப்பியிருக்கிறார் நூலாசிரியர்.
(இரு நூல்களின் ஆசிரியர்: மு.முகம்மது சலாகுதீன்;
பஷாரத் புக் பப்ளிஷர்ஸ், சென்னை.
தொடர்புக்கு: 98849 51299.