

ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்;
மேவானி கோபாலன்;
நர்மதா பதிப்பகம், சென்னை.
தொடர்புக்கு: 9840226661.
‘ஆலயங்களை அறிவோம்’ என்னும் பெயரில் வெறுமனே இந்தப் பிராகாரத்தில் பைரவருக்கு தனிச் சந்நிதி இருக்கிறது என்னும் ரீதியில் தகவல்களைத் தரும் புத்தகமாக இல்லாமல், நமக்கு நன்கு அறிமுகமான கோயில்களில் கடைப்பிடிக்கும் அரிய சடங்குகள், பழக்க வழக்கங்கள், மரபுகள் போன்றவற்றையும் களஞ்சியமாக அளிப்பது, புத்தகத்தின் தலைப்புக்கு நியாயம் செய்கிறது. திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருக்கும் அம்மன் கோயிலில் நடக்கும் உச்சிக்கால பூசையை பெண் வேடமிட்டுத்தான் பூசாரி செய்கிறார், மதுரை அழகர் கோயிலில் மலை உச்சியில் பிறக்கும் நூபுர கங்கையின் நீரில் செய்யப்படும் சம்பா தோசைதான் இங்கு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது என்பது போன்ற பல அரிய விஷயங்கள் புத்தகமெங்கும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
நல்லனவெல்லாம் தரும் கோயில்கள்
திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்;
அபயாம்பாள்;
அருணா பப்ளிகேஷன்ஸ்;
சென்னை.
தொடர்புக்கு: 94440 47790.
உடலுக்கும் மனத்துக்கும் ஆரோக்கியம் வேண்டி தேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசம் படைத்தார். அதைப் போல், உடல் நலத்தோடு மன நலனுக்கும் அருள்பாலிக்கும் 47 கோயில்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். அத்தனை கோயில்களுமே திருவாரூர் மாவட்டத்தில் இருப்பவை. திருவாரூரில் பிறந்தாலே முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. அப்படிப்பட்ட திருவாரூரில் கோயில் கொண்டுள்ள இறை சொரூபங்களைத் தரிசிப்பது எத்தகைய சிறப்பானதாக இருக்கும் என்பதைப் புரியவைக்கிறது இந்தப் புத்தகம்.