திருமாலின் 10 அவதாரங்கள்

திருமாலின் 10 அவதாரங்கள்
Updated on
2 min read

l மச்ச அவதாரம்: பிரம்மனிடமிருந்து வேதங்களைக் கவர்ந்துசென்ற சோமுகாசுரன் சமுத்திரத்தின் ஆழத்தில் சென்று ஒளிந்துகொள்கிறான். திருமால் மிகப் பெரிய மீனாக அவதாரமெடுத்து சோமுகாசுரனை சம்ஹாரம் செய்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அருளினார்.

l கூர்ம அவதாரம்: அமிர்தத்துக்காக தேவர்களும் அசுரர்களும் மந்திர மலையை மத்தாகக் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தபோது, மலையை கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்துத் தாங்கினார் திருமால்.


l வராஹ அவதாரம்: திருமால் பன்றி அவதாரம் எடுத்து இரண்யாட்சனை பாதாள உலகத்துக்குச் சென்று அழித்தார்.


l நரசிம்ம அவதாரம்: இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்னும் பக்தன் பிரகலாதனின் நம்பிக்கையைக் காப்பதற் காகவும் இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்வதற் காகவும் திருமால் சிம்ம அவதாரம் எடுத்தார்.


l வாமன அவதாரம்: மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கவும் உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்னும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தவும் குள்ள தோற்றத்தோடு திருமால் எடுத்த அவதாரம் வாமன அவதாரம்.


l பரசுராம அவதாரம்: தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை என்னும் தத்துவத்தை உணர்த்துவதற்காக திருமால் எடுத்தது பரசுராமர் அவதாரம்.


l ராம அவதாரம்: ஒரு சொல் ஒரு வில் ஒரு இல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதற்காக திருமால் எடுத்தது ராம அவதாரம்.


l பலராம அவதாரம்: திருமால் சயனித்த ஆதிசேஷனை கவுரவிக்கும் பொருட்டு கிருஷ்ண னுக்கு அண்ணனாக பலராமர் அவதாரத்தை திருமால் எடுத்தார்.


l கிருஷ்ண அவதாரம்: கம்சன் என்னும் அசுரனின் சம்ஹாரத்தை நிகழ்த்துவதற்காக திருமால் எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம்.


l கல்கி அவதாரம்: புவியில் அக்கிரமங்களும் தீமைகளும் அதிகரிக்கும்போது பகவான் கல்கி அவதாரம் எடுப்பார்; தீய சக்திகளை அழித்து உலகத்தின் ஜீவராசிகளை யும் காப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

- தொகுப்பு: யுகன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in