சிவனாலும் சபிக்க முடியாதவர் விநாயகர்

சிவனாலும் சபிக்க முடியாதவர் விநாயகர்
Updated on
1 min read

நாமசங்கீர்த்தனம் நிகழ்ச்சிகளில் கேட்பவர்களைப் பக்தி சிரத்தையில் ஆழ்த்தும் அரிய தகவல்களைச் சடசடவென்று பொழியும் வல்லமை மிக்கவர் இசைச் சொற்பொழிவாளர் சிந்துஜா. அவரிடம் விநாயகரின் பெருமைகளை, சிறப்புகளை உணர்த்தும் ஒரு வரிச் செய்திகளைச் சொல்லச் சொன்னோம்.

அதன் தொகுப்பு இது:

l அகத்தியர் முத்தமிழ் நூல்களை ஆதியில் இயற்றியவுடன் அவற்றை ஓத விநாயகர்தான் மேருமலையில் தன்னுடைய தந்தத்தால் அவற்றைப் பொறித்துவைத்தார்.

l தந்தையாகவே இருந்தாலும் எந்தக் காரியத்தையும் தொடங்குவற்கு முன் விநாயகனைத் தொழுதுவிட்டு தொடங்க வேண்டும் என்பதை ஒரு சமயம் சிவன் மறந்துவிட்டு, திரிபுரசம்ஹாரம் செய்வதற்காகக் கிளம்பும்போது தேர் இற்றுப்போன இடம்தான் அச்சிறுபாக்கம். அச்சு இற்றுப் போன இடம்.

l ஈசனுக்கு தான் சொல்லும் தத்துவத்தை உமாதேவி கவனிக்கவில்லை என்பதால் ஏற்பட்ட கோபத்தில் உமாதேவி உட்பட ஈரேழு உலகத்தில் இருப்பவர்களையும் சபித்தார். விநாயகரை மட்டும் அவர் சபிக்கவில்லை. ஏனென்றால் விநாயகர் சிவசமானர். விநாயகரைச் சபித்தால் அதனால் தனக்கே பாதிப்பு வரும் என்பதை சிவன் உணர்ந்திருந்தார்.

l விநாயகரை மகிழ்விக்க மாமா மகாவிஷ்ணு செய்த கரணமே, தோப்புக்கரணம். ‘தோர் பிஹி' என்றால் காது என்று அர்த்தம்.

l விநாயகரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத வியாசர், அவரின் வேகத்தைக் குறைக்க, கடினமான பதங்களைப் போட்டுச் சொன்னதற்கு ‘பாரத குட்டு’ என்று பெயர். மர்மமான முடிச்சுகள் கொண்டது. அவை மொத்தம் 8,800 பாடல்கள்.

l திருமுருகன்பூண்டியில் தவித்த சுந்தரருக்குத் திருவிளையாடலைச் செய்தது என்னுடைய தந்தையார்தான். அதில் இந்த கணபதியான் பங்கு எதுவும் இல்லை என்பதை அழகாய் உரைத்திட்டவரின் திருப்பெயர் - கூப்பிடு பிள்ளையார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in