

கேரள திவ்ய தேசங்கள்
ஜே.வி.நாதன்
விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்.
தொடர்புக்கு: 90470 87053
திருப்புலியூர், திருச்செங்குன்றூர், திருவாறன்விளை, திருவண் வண்டூர், திருக்கடித்தானம், திருவல்லவாழ், திருவட்டாறு, திருவெண்பரிசாரம், திருவனந்த புரம், திருநாவாய், திருமூழிக்களம், திருவித்துவக் கோடு, திருக்காட்கரை ஆகிய ஊர்களில் இருக்கும் ஆலயங்கள் கேரள திவ்ய தேசங்கள் என அழைக்கப்படுகின்றன. கோயிலின் தல புராணத்தோடு பலரும் தங்களின் எழுத்து எல்லையைச் சுருக்கிக்கொள்வார்கள்.
ஆனால், இந்த நூலின் ஆசிரியர் ஜே.வி.நாதன் தல புராணத்தோடு, கோயிலின் அமைப்புகளைப் பற்றிய தெளிவான விவரணை, கோயிலில் அருள்பாலிக்கும் மூலவர் குறித்த புராண விவரங்கள், ஆலயத்தில் பிரதானமாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள் குறித்த தகவல்கள், கோயிலின் அமைவிடம் குறித்த சரியான விவரம், ஆலயத்தின் தரிசன நேர விவரங்கள் போன்ற பல தகவல்களையும் அடுக்கடுக்காக அளித்துள்ளார்.
முருகனுக்குப் பக்தர்கள் காவடி எடுப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வழிபட்ட திருப்புலியூர் ஸ்ரீ மாயபிரான் பெருமாள் கோயிலில் மகர சங்கராந்தி விழாவில் பக்தர்கள் பெருமாளுக்குக் காவடி எடுத்து வழிபடுவதை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
பக்தி அனுபூதியோடு ஆலயத்தில் நடைபெறும் சடங்குகள், மக்களின் பிரார்த்தனைகள், நம்பிக்கைகளும் இதில் பதிவாகியிருக்கின்றன.
| ஏற்றம் தரும் இறை தரிசனம் தமிழக திருத்தலங்கள் |
முன்னூர் கோ. ரமேஷ் |