

இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அருளிய கீர்த்தனை ‘மகா கணபதிம்’.
நாட்டை ராகத்தில் பாரம்பரியமாக இந்தப் பாடலைப் பாடுவார்கள்.
ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம், கொன்னக்கோல் என மரபார்ந்த பாடலை இன்றைய தலைமுறையும் சுவீகரித்துக்கொண்டு பாடுவதைக் கேட்கும்போது, அலாதியான பரவசம் மனத்தில் ஏற்படுகிறது.
பிரியங்கா, சைனிகாவின் குரலில் நாட்டை ராகத்தின் மேன்மையான சங்கதிகள் இம்மியளவும் பிசகாமல் இடம்பெற்றிருக்கின்றன.
அக்ஷயின் காத்திரமான குரலில் கொன்னக்கோலில் ஜதிகளின் பிரயோகம் தொடங்கும்போதே, ஒரு ராக விருந்துக்கு நம்முடைய செவிகள் தயாராகிவிடுகின்றன.
சர்கம், சரோட், சாரங்கின் தந்திகளில் ஸ்வரங்களின் தவழலும் அதற்கு இணையாகப் பயணிக்கும் இரு பெண்களின் குரலிசையும் சாகசம் செய்கின்றன. சாதாரண சாகசம் இல்லை; ரோலர் கோஸ்டர் சாகசம்!
அந்த சாகசத்தைப் பார்ப்பதற்கு நீங்களும் தயார் ஆகுங்கள்.
https://www.youtube.com/watch?v=m0JcwL7ohaA