

மகா சிவராத்திரியை ஒட்டி சிவ ஆலயங்களில் பக்தியின் அடர்த்தியை மக்களின் மனத்தில் விதைக்கும் பலவிதமான இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் நடக்கும்.
இந்தக் காணொளியில் கர்னாடக இசை வானில் பிரகாசிக்கும் இளம் நட்சத்திரமான அபிஷேக் ரகுராம் வயலின் வாத்தியக் கலைஞர் கணேஷ் பிரசாத், மிருதங்க வித்வான் பத்ரி சதீஷ்குமார் ஆகியோரோடு இணைந்து, முத்துசுவாமி தீட்சிதர் சிவபெருமானின் கருணையைப் பேசும் அரிதான கீர்த்தனையை பாடியிருக்கிறார்.
முத்துசுவாமி தீட்சிதர் இந்தக் கீர்த்தனையை சாரங்கா எனும் ராகத்தில் அமைத்திருப்பார்.
அந்த ராகத்தின் சஞ்சாரங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் இந்தக் காணொளியில் நம் செவிகளுக்குத் தரிசனப்படுத்தி இருக்கிறார் அபிஷேக் ரகுராம்.
கேட்டுப் பாருங்கள்...
இசையே சிவம் என்பதை உணர்வீர்கள்!
https://www.youtube.com/watch?v=WV6OF0XMIjg