Published : 08 Jul 2022 02:07 PM
Last Updated : 08 Jul 2022 02:07 PM

கர்னாடக இசை உலகின் பாலமுரளி தேசிய விருதுகள்!

இசை மேதை, மறைந்த டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணாவின் 92வது பிறந்த நாளான கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று விருது வழங்கும் நிகழ்ச்சியாகவும் இசை நிகழ்ச்சியாகவும் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

பால முரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் பாரதிய வித்யா பவன் மற்றும் எஸ்.எஸ்.வி.எம். நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியின் தொடக்கமாக பால முரளி கிருஷ்ணாவின் பிரதான சீடர்களான டாக்டர் கே. கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார் குழுவினர் பால முரளி பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடி விழாவைத் தொடங்கி வைத்தனர்.

பாலமுரளி தேசிய விருதுபெறும் டி.கே. மூர்த்தி எம்.சந்திரசேகரன்விக்கு விநாயக ராம்

கர்னாடக இசை உலகில், தத்தமது தளங்களில் உச்சத்தை தொட்ட இசை கலைஞர்ககளால் எனக் கொண்டாடப்பட்டுவரும் டாக்டர் டி.கே. மூர்த்தி (மிருதங்கம்), எம்.சந்திரசேகரன் ( வயலின்), விக்கு விநாயக ராம் (கடம்) ஆகிய மூவருக்கும் முறையே 2020, 2021, 2022 வருடங்களுக்கான ‘முரளி நாத லஹிரி’தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இவை, விருது மடலுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுத் தொகையும் கொண்டவை. இதற்கான காசோலைகளை பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை சார்பாக டாக்டர் வம்சி மோஹன் டாக்டர் சுதாகர் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கர்னாடக இசை உலகின் பல்கலை வித்தகர் டாக்டர் டி.வி கோபால கிருஷ்ணன், பாரதிய வித்யா பவன் இயக்குநர் கே.என். ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்றனர். அத்துடன் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா உடனான தங்களது நினைகளையும் அவரது சிறப்புகளையும் விழா அரங்கில் திரண்டிருந்த இசை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பால முரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை சார்பாக டாக்டர் கே. கிருஷ்ணகுமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x