வடக்கும் தெற்கும்

வடக்கும் தெற்கும்
Updated on
1 min read

தெற்கில் பக்தி மார்க்கத்தில் சிறப்பான கவனத்தைப் பெற்றுவரும் பக்தர்களைப் பற்றி வடக்கில் இருப்பவர்களுக்கு குறைவாகவே தெரியும். அதேபோல, வடக்கில் பக்தியில் சிறந்திருப்பவர்களைப் பற்றிய விவரங்களை தெற்கில் இருப்பவர் களும் அரிதாகவே அறிந்திருப்பர்.

பிருந்தாவனக் கோயில்களில் மிகவும் புகழ்பெற்றதும் பரப்பில் பிரம்மாண்டமானதுமான ரங்கஜி மந்திர் கோயிலில் தென்னகத்தின் பக்தர்களைப் போற்றும் பல பதிவுகள் உள்ளன. இந்தக் கோயிலின் முகப்பிலேயே ஆண்டாளின் உருவத்தைப் பதித்திருக்கின்றனர். கோயிலின் பிரகாரத்துக்கு உள்ளேயும் ஆண்டாள் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

அந்தக் கோயிலின் உள்ளே இருக்கும் கண்காட்சி அரங்கில் விழாக் காலத்தில் இறைவனைத் தாங்கும் வாகனங்களை காட்சிக்கு வைத்திருக்கின்றனர். அவை சேஷ வாகனம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, ஹம்ச வாகனம், கிளி வாகனம், சிங்கம், கருடன், யானை, குதிரை, பல்லக்கு உள்ளிட்டவை அடங்கும்.

வடக்கே இருக்கும் பிருந்தாவனக் கோயிலில் பெரிதும் தெற்கில் இறைவனைத் தாங்கும் வாகனங்களை வைத்திருப்பதன் மூலம் இங்கே வடக்கும் தெற்கும் சங்கமமாகின்றன. அதோடு, இங்கிருக்கும் ஓர் ஆலயத்தில் பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் சிற்பமும் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in