செயலே தெய்வம்

செயலே தெய்வம்
Updated on
1 min read

கர்மம் செய்வது கடவுளை அடையும் ஒரு வழி என இந்து மதமும் சொல்கிறது. எந்தப் பயனை முன்னிறுத்தாமல் செய்யும் கர்மங்கள் நம்மை தெய்வாம்சமாக்கும் எனச் சொல்லப்படும்.

ஹவ ஹாவ், வியட்நாமில் பின்பற்றப்படும் ஒரு மிகப் பெரிய மதமாகும். ஹங்சுயஸ் இம்மதத்தைத் தோன்றுவித்தவர் ஆவார். 1919-ல் வியட்நாமின் தெற்குப் பகுதியில் உள்ள சாவ் டாக் மாகாணத்தில், ஹவ ஹாவ் கிராமத்தில் ஹங்சுயஸ் பிறந்தார்.

இவர் சீர்திருத்தவாதியாக அறியப்படுகிறார். தனது 15-ம் வயதில் ஹங்சுயஸ் கடுமையான நோயால் பாதிக்கப்படுகிறார். இந்த நோயின் பாதிப்பு அவரது 21-ம் தேதி வரை நீடிக்கிறது. இதனால் இவரது கல்வியும் பாதிக்கப்பட்டது.


இந்த நோய் தந்த தனிமை அவரது மனத்தை ஆழமாகப் பாதித்தது. ஆன்மிகம் குறித்த தேடல் அவருக்குள் வேரூன்றத் தொடங்கியது. 1939-ம் ஆண்டு அவர் புனிதப் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பயணங்களின் மூலம் அவர் முக்தி நிலையை அடைந்து, 1939-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி ஹவஹாவ் என்னும் புதிய மதத்தைத் தோற்றுவித்தார்.

ஹங்சுயஸ் தனது புனித் தன்மையின் பல அரிய கருத்துகளை முன்வைத்தார். மூலம் வெறும் பச்சை இலைகளையும் துத்தமான தண்ணீரையும் பயன்படுத்தி தீராத நோய்கள் பலவற்றையும் போக்கினார். இவர் பிறந்த ஊரின் பெயராலேயே இந்த மதம் அழைக்கப்பட்டுவருகிறது. மேலும் அவர் பிறந்த புனிதத் தலமாகவும் வழிபடப்பட்டு வருகிறது. இன்று இந்த மதத்தை ஐம்பது லட்சம் பேர் பின்பற்றுகிறார்கள். இந்த மதத்தின் முக்கியமான குறிக்கோள் புத்த மதத்தின் கருத்துகளை எளிய மக்களுக்கு விளக்குவதுதான். அதனால் இந்த மதத்தை ஹவஹாவ் பெளத்தம் எனவும் அழைக்கிறார்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in