ஆன்மிக நூலகம்: திருமலா - கலியுக வைகுண்டம்

ஆன்மிக நூலகம்: திருமலா - கலியுக வைகுண்டம்
Updated on
1 min read

இந்தியா முழுவதும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மத்தியிலும் புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதி பற்றிய புகைப்படங்கள், கட்டுரைகள் கொண்ட அரிய ஆங்கில நூலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. நூலின் பெயர் TIRUMALA – KALIYUGA VAIKUNTAM.

திருப்பதி ஆலயம், ஆலயம் அமைந்துள்ள திருமலையின் புராணக் கதை, திருப்பதி திருத் தலத்தின் வரலாற்று நினைவுகள், திருப்பதிக்கு ஆட்சியாளர்களாக இருந்த மன்னர்கள், திருமலை கோயிலின் கலைநயம், பிரம்மோற்சவம், திருமலையின் தீர்த்தங்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பணிகள், பசுமை திருமலை என்ற பெயரில் நடக்கும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விரிவான கட்டுரைகள், புகைப்படங்களோடு தொகுக்கப்பட்ட ஆவணம் இது.

திருப்பதி லட்டு தயாரிப்பு, விநியோகம் குறித்த செய்திகளும் உண்டு. திருமலை திருப்பதி தேவஸ்தானம், 12 கோயில்களைப் பராமரித்து வருகிறது. இதில் பணியாற்றுவோர் 14,000 பேர். இந்து மதம், இதிகாச புராணம், ஆகமங்கள், கோயில்கள் பற்றி எண்ணற்ற நூல்களையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஜெ.ரமணன் மற்றும் விருந்தா ரமணனின் தீவிர முயற்சியில் அண்மையில் இந்த ஆங்கில நூல் வெளியிடப்பட்டது.

நூலை வாங்குவதற்கு ஜெ.ரமணன்: 9443359747

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in