

ஆன்மிகப் பயிற்சியின் ஆரம்பத்தில் இருப்பவர்கள் தங்கள் குருவின் நடத்தையையே பிரதிபலிப்பார்கள். ஆனால் தங்கள் பாதையில் அவர்கள் தனித்துவத்தைப் பெறுவது அவசியம் என்பதைச் சொல்ல சூபி ஞானி செய்க் ஒரு பரிசோதனையைச் செய்தார்.
செய்க், தன் பயணத்தில் ஒரு நகரத்தின் விடுதிக்குச் சென்று சேர்ந்தார். அங்கே தென்பட்ட குரங்கு களுக்கு நடனம் ஆடுவதற்குப் பயிற்றுவித்தார். அவை நடனத்தின் நுட்பங்களை வேகவேகமாகக் கற்றுக்கொண்டன. பொன்னிற அங்கிகளை அணியவும் தலைப்பாகைகளோடு பீடுநடை போடவும் கற்றுக்கொடுத்தார். குரங்குகளோடு ஞானி செய்க் நகர்முழுக்க வலம் வந்தார். குரங்குகளின் நடனத்தை மக்கள் விரும்பிப் பார்த்தனர்.
ஒருநாள், தனது சீடர்களுடன் தான் தங்கியிருந்த சத்திரத்தில் உரையாடிக் கொண்டிருந்தார் செய்க். அப்போது தான் பயிற்றுவித்த குரங்குகளை அழைத்து, நடனம் ஆட உத்தரவிட்டார். அவையும் உற்சாகமாக நடனமிட்டன.
சூபி செய்க், தனது அங்கிக்குள் கையை விட்டு, ஒரு குத்து வேர்க்கடலையை எடுத்து ஆடிக் கொண்டிருந்த குரங்குகளுக்கு முன்னால் இட்டார். பொன்னிற அங்கிகளை அணிந்து, கம்பீரமான தலைப்பாகைகளோடு ஆடிக் கொண்டிருந்த குரங்குகள் பரபரப்புடன் நடனத்தை சடுதியில் விட்டு தரையில் கிடந்த வேர்க்கடலைகளைப் பொறுக்கித் தின்னத் தொடங்கின. நடனப் பயிற்சியையும் செய்க் அவர்கள் கற்றுக்கொடுத்த நாகரிகப் பாங்குகளையும் உடனடியாக மறந்துபோய்விட்டன. அவை அப்போது குரங்குகளாகிவிட்டன. இதைப் பார்த்த செய்க்கின் சீடர்கள் சங்கடமாக உணர்ந்தனர்.
“நீங்களும் இந்தக் குரங்குகளைப் போன்றவர்கள். நீங்கள் துறவியின் அங்கியை, துறவியின் நடனத்தைப் பாவிக்கிறீர்கள். ஆனால், சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது, பருந்துகூட குயில் போலப் பாடும். ஆனால், இப்படிப்பட்ட நிலையில் உங்களால் எப்படி துறவியாக இருக்கமுடியும்?” என்றார் சூபி ஞானி செய்க்.
| நேசம் என்பது எரியும் வஸ்து தணல் போன்ற வளையத்தை உருவாக்கவும் செய்கிறதுமூர்க்கமான ஆசையால் நான் அந்த தணல் வளைத்துக்குள் விழுகிறேன் அது எரிக்கிறது எரிக்கிறது எரிக்கிறது இந்த அடுப்பின் தீயை இந்த அடுப்பின் தீயை. |
| மக்கள் கூடும் சந்தை ஒன்றில் இரண்டு பேர் வாய்தகராறு முற்றி தாக்குவதற்கும் முயன்றனர். ஒருவன் இன்னொருவன் மீது கழியால் தாக்கப் போவதைப் பார்த்த சிஷ்டி தனது பையிலிருந்து சிதாரை எடுத்து இசைக்கத் தொடங்கினார். கோபமுற்றிருந்த அந்த மனிதன் தனது கழியைக் கீழேபோட்டு அந்த இடத்திலிருந்து அகன்றான். |