Last Updated : 04 Mar, 2021 05:52 AM

 

Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

81 ரத்தினங்கள் 64: அருளாழம் கண்டேனோ நல்லானைப் போலே

நகரங்களில் சிறந்தது என்று கருதப்படும் காஞ்சிபுரம் நகரத்தில் வேகவதி நதிக்கரையோரம், ஒரு பெரும் தனவந்தர் தினமும் ஆற்றில் நீராடி பெருமாளைச் சேவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருசமயம் அவர் நதியில் நீராடும் போது ஒரு சடலம், அவரின் அருகில் மிதந்து வந்தது. அச்சடலத்தின் உடலில் சங்கு சக்கர அடையாளங்கள் முத்திரையிடப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் அதைத் தூக்கித் தாங்கி கரைக்கு எடுத்துச் சென்று முறைப்படி ஈமச்சடங்கு செய்து அந்த உடலை எரித்தார்.

இதைக் கண்ட ஊர் மக்கள், ஓர் அனாதைப் பிணத்துக்கு மரியாதை செய்ததற்காக அவரை ஒதுக்கி வைத்தார்கள். இறைவனைத் தரிசிக்கச் சென்ற செல்வந்தரை அதற்குப் பின்னர் கோயிலுக்குள்ளும் அனுமதிக்கவில்லை. உடனே அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் மீது அருள் வந்து, அனாதைச் சடலத்துக்கு ஈமச்சடங்கு செய்த அவன் நல்லவன் என்ற வாக்கு சொன்னார்.

உமக்கெல்லாம் பொல்லானோ, இவன் இனி எமக்கு நல்லான்; நல்லான் சக்ரவர்த்தி என இவன் பெயர் நிலைக்கும் எனவும் கூறி தெய்வம் சாந்தம் அடைந்தது. அன்றுமுதல் இவர் நல்லான் சக்கரவர்த்தி எனும் பெயர் பெற்றான். இறைவனின் அருளே இவரை இப்படிச் செய்யவைத்தது. இப்படியாக உலகறிய இறைவனின் ஆழமான அருளுக்குரியவர் ஆனார் அவர்.

நல்லானைப்போலே எந்த ஒரு நல்ல செயலையும் நான் செய்யவில்லையே! இறைவனின் அருளுக்கு நான் உரியவளாவது எப்போதோ..? என பெருமூச்செரிந்தாள் நம் திருக்கோளுர் பெண் பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x