பிரபந்த சாரபோதினி - இணைய வழியில் பிரபந்த உரை

பிரபந்த சாரபோதினி - இணைய வழியில் பிரபந்த உரை
Updated on
1 min read

இளம்வயதில் ஹரிகதை உபன்யாசகரான துஷ்யந்த் ஸ்ரீதர், பெங்களூரில் பிறந்து, பிட்ஸ் பிலானியில் கெமிக்கல் எஞ்சினியரிங் முடித்து மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். தற்போது பெங்களூரில் வசித்தாலும், பல்வேறு வர்த்தகக் கல்வி நிலையங்களில் வருகைப் பேராசிரியராக பணிபுரிகிறார். இந்தியாவுக்கு வெளியேயும் பயணம் செய்து ஹரிகதா உபன்யாச நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். ‘தேசிகதயா' என்ற அறக்கட்டளை மூலம் முதியோர், ஆதரவற்றோருக்கு உதவிகள் செய்து அவர்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று ஹரிகதை நிகழ்த்திவருகிறார்.

சிறுவயதில் பெற்றோருடன் பொழுதுபோக்குக்காக நிறைய உபன்யாசங்களைக் கேட்ட அனுபவத்தின் பின்னணியில் துஷ்யந்துக்கு உபன்யாசத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. ஒவ்வொரு உபன்யாசத்தைக் கேட்கும்போதும் வால்மீகி, ராமாயணத்தை எப்படி கூறியுள்ளார், கம்பர் எப்படி கூறியுள்ளார் என்பதை நுணுகி ஆராய்ந்து தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டார்.

இந்திரா ராஜகோபாலனிடம் ‘தேசிகர் ஸ்லோகங்கள்', ‘ஆழ்வார் பிரபந்தங்கள்', ‘நாராயணீயம்', ‘பகவத் கீதை' ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். தான் கற்றது பிறருக்கும் பயன்படவேண்டுமென்ற நோக்கத்தில் ‘பிரபந்த சாரபோதினி’ இணையவழி வகுப்பை இலவசமாக இப்போது தொடங்கியுள்ளார். 24 இணையவழி வகுப்புகளைக் (தலா 90 நிமிடங்கள்) கொண்ட இந்த இணையப் பயிற்சி ஜனவரி 16-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.desikadaya.org/aep என்ற இணைய முகவரியில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in