Published : 27 Aug 2020 09:48 am

Updated : 27 Aug 2020 09:48 am

 

Published : 27 Aug 2020 09:48 AM
Last Updated : 27 Aug 2020 09:48 AM

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 01.09.2020 முதல் 21.03.2022 வரை - மிதுன ராசி வாசகர்களே

zodiac-benefits

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

பாகுபாடு பார்க்காமல் பழகி, ஒற்றுமையே உயர்வு தரும் என்பதை உணர்த்துவீர்கள். 01.09.2020 முதல் 21.03.2022 வரை உங்களுக்கு ராகு-கேது பெயர்ச்சி என்ன செய்யும் என்று பார்ப்போம்.


ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு என்ன செய்கிறோம் என்று தெரியாமலே பிரச்சினை களில் சிக்கவைத்ததுடன், தலை வலி, முதுகுவலி, கால்வலி எனப் புலம்பித் தவிக்கவைத்த ராகுபகவான் இப்போது ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டுக்கு வந்தமர்வதால் நோய் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், காது குத்து என நல்லதெல்லாம் நடந்து கொண்டேயிருக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். குலதெய்வக் கோவிலைச் சீரமைப்பீர்கள். நாடாளுபவர்களின் உதவி கிடைக்கும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 04.01.2021 வரை ராகுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், சகோதர வகையில் சச்சரவு, வரவுக்கு மிஞ்சிய செலவுகள், வீண் சந்தேகம் வந்து செல்லும். சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்கச் சான்றிதழ்களையெல்லாம் சரிபார்த்து வாங்குங்கள்.

ரோகிணி நட்சத்திரத்தில் 05.01.2021 முதல் 12.09.2021 வரை ராகுபகவான் செல்வதால் சுறுசுறுப் பாகச் செயல்பட்டுத் தேங்கிக்கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையைச் சமாளிக்க அதிகம் உழைப்பீர்கள்.குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். அடகிலிருந்த நகையை மீட்க வழி பிறக்கும். பழுதான வாகனம் ஓடும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் 13.09.2021 முதல் 21.03.2022 வரை செல்வதால் தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயம் நல்ல விதத்தில் முடிவடையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளைச் செய்வீர்கள். பங்குதாரர்கள் உங்களுடைய கருத்துகளை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார்கள். உத்யோகத்தில் அமைதி உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியைக் கவர்வீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்துகொண்டு உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் இடையே சண்டையையும், உடல் நலக்குறைவையும் அடுக்கடுக்காகத் தந்தாரே! காரியத்தடை, மன உளைச்சல், டென்ஷன் எனத் தொல்லை தந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் ஆற்றலைக் கொடுப்பார். சொத்து வாங்குவீர்கள். பழைய கடனையும் பைசல் செய்யுமளவுக்கு வருமானம் கூடும். சொந்த பந்தங்களுக்கு மத்தியில் உங்களின் தகுதி உயரும். உடல்நலம் சீராகும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

கேட்டை நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 10.05.2021 வரை கேதுபகவான் செல்வதால் ஆடை, அணிகலன் சேரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். அழகு, அறிவு, ஆரோக்யம் கூடும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழிச் சொத்துகளைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். அனுஷம் நட்சத்திரத்தில் 11.05.2021 முதல் 16.01.2022 வரை கேது செல்வதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பணவரவு உண்டு. அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து சாதுர்ய மாகத் தீர்ப்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

விசாகம் நட்சத்திரத்தில் 17.01.2022 முதல் 21.03.2022 வரை செல்வதால் வீண் விரயம், ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை, ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை வந்து செல்லும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உத்யோகத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடும். இந்த ராகுகேது மாற்றம் தோய்ந்து துவண்டிருந்த உங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்து சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்

கோயம்புத்தூர் மாவட்டம், மலுமாச்சம்பட்டி எனும் ஊரில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீநாகசக்தி அம்மனைச் சென்று வணங்குங்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.ராகு - கேதுபெயர்ச்சி பலன்கள்மிதுன ராசிமிதுனம்ராகுகேதுராகுவின் பலன்கள்ராகுபகவான்கேதுவின் பலன்கள்நட்சத்திர சஞ்சாரம்பரிகாரம்Zodiac Benefits

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x