Published : 27 Aug 2020 09:38 am

Updated : 27 Aug 2020 09:38 am

 

Published : 27 Aug 2020 09:38 AM
Last Updated : 27 Aug 2020 09:38 AM

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 01.09.2020 முதல் 21.03.2022 வரை - ரிஷப ராசி வாசகர்களே

zodiac-benefits

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

உடனிருப்பவர்களை உற்சாகப் படுத்துவதுடன் அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்கும் நல்லவர்களே. உங்களுக்கு ராகுவும், கேதுவும் 01.09.2020 முதல் 21.03.2022 வரை உள்ள காலகட்டத்தில் என்ன பலன்களைத் தரப்போகிறார்கள் என்று பார்ப்போம்.


ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் உட்கார்ந்துகொண்டு காரியத்தடைகளையும், மன உளைச்சலையும் கொடுத்துவந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். பணவரவு அதிகரிக்கும். என்றாலும் செலவினங்கள் அதற்குத் தகுந்தாற் போல் இருக்கும். ராகு ராசிக்குள்ளேயே நுழைவதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வெளி உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. சளி, இருமல், காய்ச்சல் வந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. இரவுநேரத்தில் வாகனத்தைக் கவனமாக இயக்கப்பாருங்கள்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 04.01.2021 வரை ராகுபகவான் செல்வதால் மனைவியுடன் ஈகோ பிரச்சினை, அவருக்கு உடல்நலக்குறைவுகள் வரக்கூடும். எதிலும் பிடிப்பற்ற போக்கு, தலைசுற்றல், தூக்கமின்மை, பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். ரோகிணி நட்சத்திரத்தில் 05.01.2021 முதல் 12.09.2021 வரை ராகுபகவான் செல்வதால் கடந்த கால இனிய அனுபவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். நவீன மின்னணு, மின்சாரச் சாதனங்கள் வாங்குவீர்கள்.

சவால்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் 13.09.2021 முதல் 21.03.2022 வரை செல்வதால் வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். வங்கிக் கடன் கிடைக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அரசால் அனுகூலம் உண்டு. தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளையும், மன உளைச்சல்களையும் கொடுத்துவந்த கேது இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். உங்களின் தோற்றப்பொலிவைக் கூட்டுவதுடன், அறிவாற்றலையும் அதிகப்படுத்து வார். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனுக்காகச் சிலவற்றைச் செய்து முடிப்பீர்கள். 7-ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். சொத்துப் பிரச்சினை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

கேட்டை நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 10.05.2021 வரை கேதுபகவான் செல்வதால் வராது என்றிருந்த பணம் வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை அமையும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்துச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் வீட்டு விசே ஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

அனுஷம் நட்சத்திரத்தில் 11.05.2021 முதல் 16.01.2022 வரை கேது பயணிப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். புது வேலை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அரசாங்க விஷயம் உடனடியாக முடிவடையும். பழைய காலி மனையை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் புது பதவிகள் வரும். தந்தைவழியில் உதவி கள் உண்டு. சிலர் சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெரிய பதவியில் இருக்கும் நண்பர்களாலும் உதவிகள் கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் 17.01.2022 முதல் 21.03.2022 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் அலைச்சல், இரக்கப்பட்டு ஏமாறுதல், பண இழப்புகள், ஹார்மோன் பிரச்சினை, பசியின்மை வந்து செல்லும். சட்டத்துக்குப் புறம்பான வகையில் எந்த உதவி வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் சங்கடங்கள் வரும். இந்த ராகு - கேது மாற்றம் வேலைச்சுமையையும், குடும்பத்தில் சலசலப்புகளையும் உண்டாக்கினாலும் ஓரளவு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரரைச் சென்று வணங்குங்கள். எதிலும் வெற்றி கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.ராகு - கேதுபெயர்ச்சி பலன்கள்பலன்கள்ரிஷப ராசிரிஷபம்ராகுவின் பலன்கள்ராகுபகவான்கேதுவின் பலன்கள்கேதுபகவான்பரிகாரம்Zodiac Benefits

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x