மேஷம், ரிஷபம், மிதுனம்;  வார ராசிபலன்கள்; (ஏப்ரல் 16 முதல் 22-ம் தேதி வரை) 

மேஷம், ரிஷபம், மிதுனம்;  வார ராசிபலன்கள்; (ஏப்ரல் 16 முதல் 22-ம் தேதி வரை) 
Updated on
2 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் பார்வை மூலம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள்.

குருவின் பார்வை தனஸ்தான ராசி மீது விழுவதால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரனுடன் ராசிநாதன் செவ்வாய் சம்பந்தம் பெறுகிறார்.

குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம்
எண்கள்: 5, 7, 8
பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும்.


ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

இந்த வாரம் ராசிநாதன் ஆட்சி நிலையில் அமர்ந்திருக்கிறார். நல்ல யோகமான பலன்களைப் பெறப் போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும்.

மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாகப் பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாகப் பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றைச் செய்வீர்கள். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.
மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறையக் கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும். வெளிநாடு சம்பந்தமான படிப்புகளுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.


அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்

(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் ராசிநாதன் புதன் லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது.

வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பஞ்சம விரயாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தைப் பார்ப்பதன் மூலம் பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதுர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். பாராட்டு கிடைக்கும்.

உடல்சோர்வு உண்டாகும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.

புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். அர்சியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும்.

கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயர வழி பிறக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். வேலைப்பளு காரணமாக வெளியில் தங்க நேரலாம். மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 5
பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in