

உஷாதேவி
சூரியகுலத்தைச் சேர்ந்த குலகுரு வசிஷ்டர். மிகுந்த உத்தமக் குணம் கொண்ட அவர் நந்தினி என்னும் காமதேனுவை வளர்த்துவந்தார். அதைக் கௌசிகன் என்ற மன்னன் கவர நினைத்தான். அது நிறைவேறவில்லை.
தான் அரசனாக இருந்தும் வசிஷ்டரை வெல்ல முடியவில்லை என்று நினைத்து, தன் தவ வலிமையால் அவரை வெல்ல நினைத்தான். அப்படி மனம் தளராமல் தவம் செய்து பிரம்மரிஷி என்று வசிஷ்டர் வாயாலேயே அழைக்கப்பட்டு விஸ்வாமித்திர முனிவர் ஆனார்.
பிரம்ம ரிஷியான விஸ்வாமித்திரர் தொடர்ந்து யாகங்களைச் செயது வந்தார். அதற்கு இடையூறாக அரக்கர்கள் பல தடங்கல்களைச் செய்து யாகத்துக்குத் தொந்தரவு செய்தனர். இந்நிலையில் விஸ்வாமித்திரர் சூர்ய குமாரர்களான ராமன், லக்ஷ்மணனின் உதவியைக் கேட்க முடிவு செய்தார். தசரதனின் அரண்மனைக்குச் சென்று ராமனைக் கேட்டார். ஆனால், தசரதனுக்கோ புத்திரபாசத்தால் மனம் துடித்தது. தானே படைபலத்துடன் வந்து விஸ்வாமித்திரரின் தவத்துக்கு உதவுவதாகக் கூறினார். முன்கோபத்துக்குப் புகழ்பெற்றவர் அவர். ராமனுக்கு விசுவாமித்திரரும் குருவாகத் திகழ்வார் என்று கூறினார்.
ஸ்ரீராமனும் லஷ்மணரும் விஸ்வாமித்திரரின் யாகத்தைக் காத்தனர். தாடகை, சுபாகு, அகல்யை, மாரீசன் முதலியவர்களுக்கு விமோசனமும் கிடைத்தது. யாகத்தை முடித்ததும் விஸ்வாமித்திரருடன் மிதிலைக்குப் பயணித்து அங்கே நடந்த சுயம்வரத்தில் சிவதனுசை உடைத்து ராமன் சீதையை விவாகம் முடித்தார்.
விஸ்வாமித்திரரின் யாகத்தை நிறை வேற்றச் சென்றதாலேயே ராமனுக்கு சீதையைப் பார்த்து விவாகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ராமனின் விவாகத்தைச் செய்யும் தனது பொறுப்பை அதvற்காகவே வசிஷ்டர் விஸ்வாமித்திரருக்கு விட்டும் கொடுத்தார்.
குலகுருவான வசிஷ்டரைப் போல், தன் நலத்தைத் துறந்து இறைவனையே அனுப்பி வைக்கும் அளவுக்கு நான் ஏதும் பெருமையடையவில்லையே என்று புலம்புகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com