Published : 01 Apr 2020 02:24 PM
Last Updated : 01 Apr 2020 02:24 PM

துலாம், விருச்சிகம், தனுசு ;  வார ராசிபலன்கள் (ஏப்ரல் 2 முதல் 8ம் தேதி வரை) 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)


இந்த வாரம் சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும்.
மனம் நிலைகொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது.
மனைவி குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணித் திறமையால் மேல் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள். பெண்களுக்கு எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும் முன்பு தீர ஆலோசிப்பது நல்லது.
கலைத்துறையினர் உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு ; முன்னேற்றம் இருக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
மாணவர்களுக்கு ;கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: தினமும் விநாயகருக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.
*********************************************************************************************************


விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)


இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும்.
எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ராசிக்கு 7ல் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள்.
குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.


ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும்.
பெண்களுக்கு ; திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும்.
கலைத்துறையினர் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு ; பாராட்டு கிடைக்கும். மனக்கவலை நீங்கும். ஆன்மிக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.
மாணவர்களுக்கு ; கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாகச் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
எண்கள்: 2, 9
பரிகாரம்: செவ்வாய்கிழமை விரதம் இருந்து வாராகிக்கு தீபம் ஏற்றி வழிபட, எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.
*********************************************************************************************************


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)


இந்த வாரம் ராசிநாதன் குரு தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும்.
கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும்.
குடும்பத்தில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்பச் செலவை சமாளிக்கத் தேவையான பண உதவியும் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும். பெண்களுக்கு எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு ; பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.
மாணவர்களுக்கு ; கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சினைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.
*********************************************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x