Published : 26 Mar 2020 08:58 am

Updated : 26 Mar 2020 08:58 am

 

Published : 26 Mar 2020 08:58 AM
Last Updated : 26 Mar 2020 08:58 AM

வார ராசிபலன்கள் 26-03-2020 முதல் 01-04-2020 வரை (மேஷம் முதல் கன்னி வரை) 

weekly-horoscope

மேஷராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் உச்சமாகச் சஞ்சரித்து ராசியைப் பார்க்கிறார். சுப பலன்கள் உண்டாகும். எந்த ஒரு வேலையையும் திருப்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தை மேம்படுத்தும் எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கலாம். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை குறையும்.

வீடு, மனை தொடர்பில் தொய்வு நிலை மாறும். பெண்களுக்கு, சாமர்த்தியமான பேச்சால் காரிய வெற்றி உண்டாகும். கலைத் துறையினருக்கு, நிதானமாகச் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்திலிருந்து மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். மாணவர்களுக்கு, கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும் போட்டிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 2, 4, 9.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை. அம்பாளுக்குத் தீபம் ஏற்றி வணங்க எல்லாப் பிரச்சினைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

ரிஷபராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு மாற்றம் அடைகிறார். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகளை மேற்கொள்வது குறையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும்.

ராசிக்கு 9ல் செவ்வாய் இருப்பதால் பூர்விக சொத்துக்கள் கிடைக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து நிதானமாகக் கையாள வேண்டும். பெண்களுக்கு, முயற்சிகள் பலன் தரும். கலைத் துறையினருக்கு, ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல பலன்கள் வரும். அரசியல்வாதிகளுக்கு, வளர்ச்சிக்கு எதிரான முட்டுக் கட்டைகள் நீங்கும். மாணவர்களுக்கு, படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மஞ்சள், வெள்ளை.
எண்கள்: 1, 3, 6.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று வாராகிக்குத் தீபம் ஏற்றி வழிபட்டு வரச் செல்வம் சேரும்.

மிதுனராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன், ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். அதிகமாக முதலீடு செய்யும் முன்னர் யோசிப்பது நல்லது. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்துக்குப் பின்னர் வந்து சேரும். உத்தியோகத்தில், வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டியிருக்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும்.

அக்கம்பக்கத்தவரை அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு, வீண் அலைச்சல் உண்டாகும். கலைத் துறையினருக்கு, லாபம் ஏற்படும். தொழில்நுட்பப் பணியாளர்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும். அரசியல்வாதிகளுக்கு, தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படியுங்கள். எந்தக் காரியத்தையும் யோசித்துச் செய்ய வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: மருக்கொழுந்தால் மகாலட்சுமியை வணங்கிவரக் கஷ்டங்கள் குறையும்.

கடகராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைச் செவ்வாய் ஏழாம் பார்வையாகப் பார்க்கிறார். காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தலைதூக்கும்.

எனவே, சாதுரியமாகப் பேசிச் சமாளிக்க வேண்டும். பொதுவான காரியங்களில் ஈடுபடும்போது, கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு, மனவலிமை உண்டாகும். கலைத் துறையினருக்கு, திறமை வெளிப்படும். வெளிநாட்டுப் பயணங்கள் வாய்க்கும். அரசியல்வாதிகளுக்கு, உங்களைப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். மரியாதை, அந்தஸ்து கூடும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பில் சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, வெள்ளை.
எண்கள்: 2, 6, 9.
பரிகாரம்: சப்த கன்னியரைத் தீபம் ஏற்றி வணங்க மனக் கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும்.

சிம்மராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தால் நல்ல பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கூடுதலாக வேலைச்சுமை இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். பெண்களுக்கு, உற்சாகம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, விடா முயற்சியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்கள் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாகப் படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையன்று பிரத்தியாங்கிரா தேவியை வழிபட்டுவரக் கடன் பிரச்சினை குறையும்.

கன்னிராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் ஏழாமிடத்துக்கு மாறுகிறார். காரிய வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் ஒப்படைக்கப்பட்ட பணியைச் சிறப்பாகப் பூர்த்திசெய்வீர்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியைத் தரும்.

குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மிக எண்ணங்கள் தோன்றும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு, எண்ணப்படி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்ளுங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெல்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.
திசைகள்: கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
எண்கள்: 1, 5, 9.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வருவது புத்தி சாதுரியத்தைத் தரும்.


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர்ராசிபலன்கள்வார ராசிபலன்கள்கன்னிமேஷம்மேஷம் முதல் கன்னிWeekly HoroscopeHoroscope

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

guinness-world-records

‘உயர்ந்த' சாதனை!

இணைப்பிதழ்கள்
hatrick-swetha

ஹாட்ரிக் ஸ்வேதா!

இணைப்பிதழ்கள்
news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author