

கபீர்தாசர்
அது ஒரு அதிசய மரம்
வேரில்லாமல் வளரும்
பூக்காமல் காய்க்கும்
அதற்குக் கிளையில்லை... இலையில்லை
மரம் முழுதும் தாமரையே
இரண்டு பறவைகள் பாடுகின்றன
ஒன்று குரு
மற்றொன்று சீடன்
சீடன் பல்வகைப் பழங்களை எடுக்கிறான்
வாழ்வின் சுவையை ரசிக்கிறான்
குரு அவனை மகிழ்வுடன் காக்கிறார்
கபீர் சொல்வதைப் புரிந்து கொள்வது கடினம்
“பறவையைத் தேடாதே
அதைக் காண்பது எளிது
வடிவற்றது வடிவு கொண்டதில்
நான் வடிவின் பெருமையைப் பாடுகிறேன்”
கபீர் சொல்கிறான்...
கபீர்தாசரின் நூறு கவிதைகள்
ஆங்கில மொழிபெயர்ப்பு:
இரவீந்தரநாத் தாகூர்
தமிழில்: வெ.ஜீவானந்தம்
வெளியீடுள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: ரூ.45/-
தொடர்புக்கு: 044-26251968