

நாம் சிறு குழந்தைகளின் விளையாட்டுகளைக் கண்டு மகிழ்கிறோம். கிருஷ்ணரின் குறும்பைக் கண்டு ஆராதிக்கிறோம். முருகனின் லீலைகளை ரசிக்கிறோம்.
ஆனால் விநாயகப் பெருமானை குழந்தையாகக் கருதியிருக்கிறோமா? கி.பி.1550-ம் ஆண்டு சின்ன பொம்மி நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட வேலூர் கோட்டை, ஸ்ரீ ஐலகண்டேஸ்வர் கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு எதிரில் உள்ள மண்டபத் தூணில்தான் இந்த விநாயகக் குழந்தையின் லீலைகளைக் காண்கிறோம்.
முதல் சிற்பத்தில் தும்பிக்கையால் மோதகத்தை எடுத்துக்கொண்டுசெல்கிறார். அடுத்ததில் மோதகத்தைக் கையில் வைத்துக்கொண்டு யாராவது பார்க்கிறார்களா என்று திரும்பிப் பார்த்தபடியே தவழ்கிறார். தொந்தியும் தொப்பையுமாக குழந்தை விநாயகர் தவழ்ந்து செல்லும் கோலம் அழகு. சிற்பியின் கற்பனைத் திறத்தையும் அதைக் கல்லில் கொண்டு வந்துள்ளதையும் கண்டு மலைக்காமல் இருக்க முடியவில்லை. n ஓவியர் வேதா n