

ஓவியர் வேதா
கிருஷ்ணப்ப நாயக்க மன்னரால் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தனித்துவம் வாய்ந்த சிற்பங்களுக்காகப் பெருமை பெற்ற கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயிலில் உள்ள சிற்பம் இது.
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள இந்த ஆலயத்தில் இருக்கும் ரதி தேவியின் சிற்பத்துக்கு ஒரு விசேஷம் உண்டு. தென்னிந்தியக் கோயில்களில் உள்ள பெண் வடிவங்களில் மூக்குத்தி, புல்லாக்கு போன்ற ஆபரணங்கள் இருக்காது.
இந்த ரதி தேவியின் சிற்பத்தில் மூக்கின் இடது பக்கத்தில் ஒரு சிறு துவாரம் உள்ளது. அதில் ஒரு தீக்குச்சியை சொருகினால் ரதி தேவிக்கு சிவப்புக் கல் வைத்த அழகான மூக்குத்தி அணிந்துள்ளதுபோல் இருக்கிறது..
மூக்கின் உட்குழிவான பகுதியும் அதில் தீக்குச்சியின் மீதிப்பகுதியும் வெளியே தெரியும் வண்ணம் வடிவமைத்திருக்கும் விதம் சிறப்பு.... அதேபோல் மன்மதன் கையில் உள்ள கரும்பு வில்லின் தோகைப் பகுதியில் ஒரு சிறிய துவாரம் உள்ளது.
அதன் வழியே ஒரு சிறிய குச்சியை விட்டால் அது கரும்பின் அடிப்பகுதியில் வந்து விழும்படி கரும்பின் உட்பகுதியில் சிறிய நீண்ட துவாரம் உள்ளது.
நம் நாட்டு சிற்பிகளின் தொழில்நுட்பத்தை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.