சித்திரப் பேச்சு: கங்காதர மூர்த்தி

சித்திரப் பேச்சு: கங்காதர மூர்த்தி
Updated on
1 min read

ஓவியர் வேதா

கங்காதர மூர்த்தியின் இந்த நிற்கும் கோலம் எவ்வளவு அழகாகவும் கம்பீரமாகவும் சற்று வித்தியாசமாகவும் உள்ளது.

வலது மேல் கரம் ஜடா முடியைப் பிடித்துக்கொண்டு வெகு வேகமாக வரும் கங்கையைத் தாங்கும் கோலம் வெகு சிறப்பு....வலது கீழ் கரத்தில் நாகத்தைப் பிடித்துள்ளார்.

இடது மேல் கரம் ஜடா முடியை அவிழ்ப்பது போல் உள்ளது. மற்றொரு கரத்தை இடுப்பில் ஒய்யாரமாக வைத்திருக்கும் பாங்கு வெகு அழகு.

வலது காலைத் தூக்கி முயலகன் தலை மீது வைக்க, அவன் பாரம் தாங்காமல் சற்றுச் சாய்வாகப் படுத்து இடக்கையாலும் பாதத்தைத் தாங்கும் கோலம் வெகு அருமை. அருகில் பகீரதன் இருக்க இறைவனைச் சுற்றி தேவர்களும் இருக்கின்றனர்.

இந்த கங்காதரர் சிற்பம் பல்லவர்கள் காலத்திய குடைவரைச் சிற்பமாக உள்ளது. இவர், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னிதியில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னிதி செல்லும் வழியில் இடப் புறம் ஒரு சிறிய அறை போல் காணப்படும் பகுதியில் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in