

ஓவியர் வேதா
விட்டலன்ஒரு பெரிய சிங்கம் தன் வாயைத் திறந்திருக்க அதிலிருந்து ஒரு சிங்கக்குட்டி வெளியே வர அதன் வாயில் புனல் போன்ற அமைப்பின் வழியாக அபிஷேக நீர் வெளியே வருகிறது. பெரிய சிங்கம், குட்டி சிங்கத்தின் வாயும் கோரைப் பற்களும் அருமையாக இந்தச் சிற்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமல்லாமல் பிடரி முடியும் கால்களில் உள்ள கூரிய நகங்களும் என ஒவ்வொரு பகுதியையும் பார்த்துப் பார்த்து ரசித்துச் செதுக்கியிருக்கிறார் சிற்பி. இந்த அரிய சிற்பம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள விட்டலாபுரம் என்னும் கிராமத்தில் உள்ளது. விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக இருந்த விட்டலராயர் என்பவரால் கி பி 1547-ல் கட்டப்பட்ட விட்டலன் கோயிலில் உள்ளது.