Published : 30 Jan 2020 12:14 PM
Last Updated : 30 Jan 2020 12:14 PM

வார ராசி பலன் 30-01-2020 முதல் 05-02-2020 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் மறைந்திருந்தாலும் உச்சநிலையில் இருப்பது பல வழிகளிலும் முன்னேற்றத்தைக் கொடுக்கும். தொழில், வியாபாரத்தில் முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, வருவாய் உயர்வு இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாகப் பேச வேண்டும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். பெண்களுக்கு ,முன்கோபத்தைக் குறைத்து நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கலைத் துறையினருக்கு, உங்கள் திறமைகள் பளிச்சிடும். அரசியல்வாதிகளுக்கு, நீண்ட நாள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு, கவனத்துடன் படித்தால் கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் திறன் ஏற்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: சப்தகன்னியரை வணங்க எதிலும் வெற்றி உண்டாகும். மனக்குழப்பம் தீரும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் ராசிநாதன் செவ்வாயால் எதிர்ப்புகளைச் சமாளித்து வாழ்வில் ஏற்றம் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்துக்கு ஆளாக வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை அகலும். உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்களுக்கு, அடுத்தவர்களுக்கு உதவும்போது சங்கடமான சூழ்நிலை உண்டாகும். கலைத் துறையினருக்கு, சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, தைரியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, போட்டிகள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஜீரணக்கோளாறு ஏற்படலாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 3, 6, 9
பரிகாரம்: மாரியம்மனுக்கு வேப்பிலை அர்ப்பணித்து தீபம் ஏற்றி வணங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் மீண்டும் வேகம் பெறும். எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. மேலிடத்துடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும். குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்குள் இறுக்கமான சூழ்நிலை அகலும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. சோம்பல் குறைந்து உற்சாகம் ஏற்படும். பெண்களுக்கு, எடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். கலைத் துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, வாக்குவன்மை அதிகரிக்கும். மாணவர்களுக்கு, சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: சித்தர்கள் பீடத்துக்குச் சென்று வணங்குங்கள்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசி சூரியன் பலம் பெறுகிறது. திட்டமிடுவதிலும், உறுதியான முடிவு எடுப்பதிலும் தயக்கம் காட்ட மாட்டீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்சினைகள் தீரும். வாக்குவன்மையால் காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தன்னிச்சையாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். பெண்களுக்கு அடுத்தவர் கூறும் கருத்துகளில் நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. கலைத் துறையினருக்கு, பண விவகாரங்களில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு, எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்
எண்கள்: 3, 5, 6
பரிகாரம்: சனி பகவானை வணங்கி காகத்துக்கு எள் கலந்து சோறு வைக்க மனக்கஷ்டம், பணக்கஷ்டம் நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் பஞ்சம அஷ்டமாதிபதி புதன் சஞ்சரிப்பதால் புத்தித் தெளிவு ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். அரசாங்கரீதியான பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்துகொள்ள நேரிடும். கணவன் மனைவிக்குள் மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு, திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு, பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசியல்வாதிகளுக்கு, மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்களுக்கு, கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். வயிற்றுக் கோளாறு உண்டாகலாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: நீலம், மஞ்சள்
எண்கள்: 2, 3, 6
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வணங்குவது மனோதைரியத்தைத் தரும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சுக்கிரன் மாறி உச்ச நிலைக்கு அடைகிறார். வீண்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மேலிடத்தில் கசப்புணர்வு மாறும். கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய் தந்தையரின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். பல வழிகளிலிருந்தும் பணம் வரும். பெண்களுக்கு, எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. கலைத் துறையினருக்கு, பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு, கவனத்தைச் சிதறவிடாமல் பாடங்களைப் படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: அம்மன் கோயிலுக்குச் சென்று பாலபிஷேகம் செய்து வழிபட்டு வர காரிய வெற்றி உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x