

ஓவியர் வேதா
கையில் பாசம், சூலம் ஏந்தியபடி மிகவும் உயரமாக கம்பீரத்துடன் காணப்படும் திருவானைக்கா ஜம்புகேசுவரர் சன்னிதியில் உள்ள இந்த துவாரபாலகர் உலோக வார்ப்புச் சிலையாகும்.
தலை சாய்த்து உடல் வளைத்து தூக்கிய காலை கதாயுதத்தைச் சுற்றியுள்ள நாகத்தின் மீது வைத்திருக்கும் பாங்கு அபாரமானது.
கல் சிற்பத்தில் காணப்படும் நுணுக்கமான வேலைப்பாடுகளும் ஆடை ஆபரணங்களும் இந்த உலோக வார்ப்பில் சிறப்பாகக் காணப்படுகின்றன. குறிப்பாக கைவிரல், நகங்கள்கூட நுட்பமாகக் காட்டப்பட்டுள்ளன.