ஆன்மிக நூலகம்: காஞ்சிப் பெரியவரின் மகத்தான வாழ்க்கை

ஆன்மிக நூலகம்: காஞ்சிப் பெரியவரின் மகத்தான வாழ்க்கை
Updated on
1 min read

காஞ்சி மகாபெரியவரின் முதல் ஐம்பது ஆண்டு கால வாழ்க்கையையும் பணிகளையும் தெரிவிக்கும் முகமாக, தி இந்து குரூப் ஆப் பப்ளிகேஷனால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ‘Embodiment of Truth’-ன்இரண்டாம் பாகம் இது. காஞ்சிப் பெரியவரின் யாத்திரைகள், காஞ்சிக்குத் திரும்புதல், காஞ்சியில் கழித்த கடைசி பத்தாண்டுகள், சதாப்தி கொண்டாட்டங்கள், சித்தி ஆகியவற்றை அபூர்வமான புகைப்படங்கள், ஆவணங்களோடு இந்த நூல் உருவாகியுள்ளது.

இந்திய சுதந்திரத்துக்கு முன்னாலும் பின்னாலும் அதன் தொடர்பில் காஞ்சிப் பெரியவர் கூறிய கருத்துகள், செயல்பாடுகளை அன்றைய தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்திகளோடு சேர்த்துப் பார்க்கக்கூடிய வகையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேசப் பிரிவினை, அரசியல் சாசனம், சனாதன தர்மத்தின் அடிப்படையில் மகாபெரியவரால் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பணிகள் ஆகியவை விரிவாக இந்த நூலில் காணக்கிடைக்கின்றன.

காஞ்சி மகாபெரியவரின் வாழ்க்கையை அதன் முழுமையோடு புரிந்துகொள்வதற்கான கருவியாக இந்த நூல் திகழ்கிறது. காஞ்சி சங்கர மடத்தோடும் காஞ்சிப் பெரியவரோடும் மிகவும் நெருக்கமாக இருந்த ஓவியர் சில்பியின் ஓவியங்கள் இந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் முன்பகுதி வாழ்க்கையின் ஒரு சித்திரத்தை காஞ்சிப் பெரியவரின் வாழ்க்கை மூலம் தரிசிக்க முடியும்.

தி இந்து குரூப் பப்ளிகேஷன்ஸ்
859 & 860, அண்ணா சாலை,சென்னை– 02
விலை : ரூ. 399/-
தபால் வழியாக காசோலை அனுப்பிப் பெறலாம். THG Publishing Private Limited என்ற பெயரில் ரூ. 459-க்கு காசோலை அனுப்பிப் பெறலாம். தபால் செலவு ரூ. 60/- இணையவழியில் வாங்க: www.thehindu.com/publications மொத்தமாகப் பிரதிகள் வாங்க tobookstore@thehindu.co.in-க்கு மின்னஞ்சல் செய்யவும். மேலும் விவரங்களுக்கு 1800 3000 1878

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in