வார ராசி பலன் 02-01-2020 முதல் 08-01-2020 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

வார ராசி பலன் 02-01-2020 முதல் 08-01-2020 வரை (மேஷம் முதல் கன்னி வரை)
Updated on
3 min read

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் அவரின் பார்வை மூலமாக மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சுபச்செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி பயணம் செல்ல முடியும். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதைத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசுவதால் இடைவெளி குறையும். பெண்களுக்கு, எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத் துறையினருக்கு, தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு, கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
எண்கள்: 2, 3, 9.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் மிக அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிக்கிறார். நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனத்தில் இருந்த கவலை நீங்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பெண்களுக்கு, காரிய அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலைக் குறைத்துக்கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு, வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் குறையக் கூடும். நன்கு படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் அனைத்துக் கிரகங்களும் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் உற்சாகமாகக் காணப்படுவார்கள். பெண்களுக்கு, மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து பலன் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கலைத் துறையினருக்கு, வருமானம் உயர வழிபிறக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைக் கவனமாகப் படித்துக் கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்.
திசைகள்: மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: பச்சை, மஞ்சள்.
எண்கள்: 3, 5.
பரிகாரம்: பெருமாளைப் புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வாகன யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதுரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையைச் சிறப்பாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் நீங்கும். பெண்களுக்கு, பணவரவு இருக்கும். அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். கலைத் துறையினர் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். மாணவர்களுக்கு, புத்திசாதுரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை.
எண்கள்: 2, 5.
பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லாக் காரியங்களும் கைகூடும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதன் சூரியன் கிரக கூட்டணியுடன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். பெண்களுக்கு, உதவி கேட்டு வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அரசியல்வாதிகள் சகாக்களைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களுக்கு, சகமாணவர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 1, 3.
பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சினைகள் குறையும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் கிரக சேர்க்கையுடன் சஞ்சரிக்கிறார். எல்லாக் காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். ராசிநாதனின் சார பலத்தின் மூலம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தைக் குறைத்துப் பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு, நிதானமாகப் பேசுவது நன்மை தரும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. கலைத் துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். மாணவர்களுக்கு, சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெளிர்பச்சை, வெள்ளை.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: கிருஷ்ண பரமாத்மாவை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in