

ஓவியர் வேதா
பன்னிரண்டு கைகளுடன் பிரம்மாண்டச் சிற்பமாக நிற்கும் காளி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோயிலில் நிற்கிறாள்.
அக்னி போன்று தகித்தெரியும் ஜடாமுடியைச் சுற்றி நாகாபரணம் சூட்டியுள்ளார் ஆவுடையார் கோயில் காளி. நடனப் போட்டியில் சிவபெருமான் தனது வலதுகாலைத் தூக்கி ஆடிய தாண்டவத்தைக் கண்ட தேவி வெட்கத்துடன் கைபிசைந்து நிற்கும் காட்சி அழகு.
தோல்வியால் ஏற்பட்ட ஏமாற்றம், இயலாமையும் தெரிகிறது. நம் சிற்பிகளின் கலைத்திறனுக்குச் சான்றாக நிற்கும் இந்தக் கோயில் அரிமர்த்தனப் பாண்டியன் காலத்தில் மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது.