நபிகள் வாழ்வில்: ஒவ்வொரு இறைத்தூதரும் மேய்ப்பர்களே

நபிகள் வாழ்வில்: ஒவ்வொரு இறைத்தூதரும் மேய்ப்பர்களே
Updated on
1 min read

இறைத்தூதர் நபிகள் தனது இளம்வயதிலேயே மக்காவிலுள்ள ஆடுகளை மேய்க்கத் தொடங்கி வருவாய் ஈட்டத் தொடங்கினார். நபிகளை வளர்த்த மாமா அபு தலீப் பெரும் பணக்காரர் அல்ல. அதனால் நபிகளுக்கு அந்த வருவாய் தேவையாக இருந்தது.

பிற்காலத்தில், நபிகள் தனது தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, மேய்ப்பராகப் பணியாற்றாத யாரும் இறைவனின் தூதராக ஆகமுடியாதென்று கூறினார். நபித்தோழர்கள் ஆச்சரியமடைந்து, அப்படியா? என்றனர்.

“ஒரு மனிதர் காட்டுக்கோ வயல்களுக்கோ தனது கால்நடைகளுடன் செல்லும்போது, அவர் இயற்கைக்கு அருகில் செல்வார். அங்கேதான் படைப்பு குறித்த எண்ணம் அவருக்குத் தோன்றும். மலைகளின் அகன்ற எழிலைப் பார்ப்பார். படைப்பவனுக்கு அருகில் செல்ல அந்த மனிதனை அதுவே தூண்டும்.” என்றார் நபி.

- பவி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in