சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்து அரசப்பெண்

சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்து அரசப்பெண்
Updated on
1 min read

ஓவியர் வேதா

தமிழக ஆலயங்களில் தெய்வ உருவங்களோடு தனியாக உள்ள சிற்பங்கள் அந்தக் கோயிலோடு தொடர்பு கொண்ட மன்னர், புரவலர், அரச குடும்பத்தினருடையதாக இருப்பது வழக்கம்.

கையில் விளக்கோடு காணப்படும் இந்தப் பெண்ணின் உடலமைப்பும் நிற்கும் தோரணையும் இவள் அரச குலத்தவளாக இருக்கலாம் என்பதைக் காண்பிக்கிறது. தலை அலங்காரமும் இடுப்பில் முத்துச்சரங்களும் மேலும் அதை உறுதிப்படுத்துகின்றன. கழுத்தில் அணிந்துள்ள பூமாலையும் அவளைத் தனித்துக் காட்டுகின்றன.

தீபத்தைக் கையிலேந்தியிருக்கும் அவளது அழகு பரவசப்படுத்துகிறது. இந்தச் சிலை இருப்பது ஸ்ரீவைகுண்டம் கோயிலில்தான். தூத்துக்குடிக்கு அருகே இருப்பதால்தான் இத்தனை முத்துச்சரங்களை அவள் அணிந்திருக்கிறாளோ?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in