

“நான் யார்? நான் என்னை எப்படிப்பட்டவனாக உணர்கிறேன்? எப்படிப்பட்ட வழிகளிலெல்லாம் என் அனுபவம் என் அடையாளத்தை உருவாக்குகிறது? என் நடத்தை, எண்ணவோட்டம், குணம் ஆகியவை மற்றவர்களிலிருந்து எப்படி மாறுபட்டதாக இருக்கின்றன? என் பார்வையை வடிவமைப்பதில் என் பாரம்பரியம், மதம் ஆகியவை பங்களிப்பு செய்கின்றனவா? என் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து என் அடையாளம் மாறுதலைச் சந்திக்கின்றதோ? என் கலையில் இவை எப்படி வேர்களைக் கண்டுபிடிக்கின்றன?”
கலைஞர்களுக்கும் தெய்விகத் தன்மைக்கும் இருக்கும் தொடர்பை, ‘அடையாளம், அனுபவம்’ என்ற தலைப்பில் பத்து கலைஞர்களின் படைப்புகள் சென்னை அடையாறு ஃபோரம் ஆர்ட் கேலரியில் காட்சிக்குவைக்கப்படவிருக்கின்றன. வரும் நவம்பர் 20 முதல் தொடங்கும் இந்தக் காட்சியில், கலைஞர்களின் கடவுள்கள் தூரிகையில் விரிந்திருப்பதைக் கண்டுரசிக்கலாம்.
ஓவியர்கள் ஏ.வி. இளங்கோ, பிஸ்வஜித் பாலசுப்ரமணியன், கே. முரளிதரன், எம். சேனாதிபதி, மனிஷா ராஜூ, நிர்மலா பிலுகா, ஆர். சுந்தரராஜூ, சந்தோஷ் கோத்தகிரி, ஷாலினி பிஸ்வஜித், தேஜோமயி மேனன் ஆகியோர்களின் ஓவியங்கள் இடம்பெறுகின்றன. மேலும் தகவல்களுக்கு: 044 42115596/97
-கனி