

டேவிட் பொன்னுசாமி
புனித செபாஸ்டியன், தான் கொண்ட நம்பிக்கைக்காகச் செய்த தியாகம் என்பது நம்பிக்கையாளர்களை மட்டுமல்லாமல் கலைஞர்களையும் ஈர்த்தது. அம்புகள் துளைக்க நிற்கும் செபாஸ்டியனின் உருவத்தை மறுமலர்ச்சி கால ஓவியர்கள் பலர் படங்களாக வரைந்துள்ளனர். அழகிய இளைஞனின் உடலில் சொருகிய ரத்தம் கசியும் அம்புகள் அவை.
மேற்கு ஐரோப்பாவின் கால் பகுதியில் பிறந்த செபாஸ்டியன், ரோம் நகரத்துக்கு இடம்பெயர்ந்து படைவீரரராகச் சேர்ந்தார். டயோக்ளிடியனின் ஆட்சியில் தளபதியாகப் பொறுப்பேற்றார். அவர் தனது படைவீரர்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அம்புகள் எய்யப்பட்டு செபாஸ்டியன் கொல்லப்பட வேண்டுமென்று டயோக்ளிடியன் உத்தரவிட்டார். செபாஸ்டியனின் அம்பு துளைக்கப்பட்ட உடல் நகரத்தின் சாக்கடையில் எறியப்பட்டது.
’‘கிறிஸ்துவுக்குச் சொந்தமான ஆன்மாக்களின் ஒவ்வொரு நரம்பையும் சைத்தான் தொந்தரவுபடுத்தவே விரும்பும். நமது போராட்டத்தை விட்டு சாத்தானிடம் சரணடையாமல் நம் ஆன்மாவை இறைவனிடம் திரும்பியளிப்பது அவசியம்.”
செபாஸ்டியனைத் துளைத்த அம்புகளை, ஆசைகள் என்றும் ஒருவர் விளங்கிக் கொள்ளலாம்.