

மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எந்த ஒரு விஷயத்திலும் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். தொழில், வியாபாரத்தில் காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.
குடும்பத்தினரிடம் தன்மையாகப் பேசிப் பழக வேண்டும். தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசிச் செய்யும் காரியங்கள் பலன் தரும். பெண்களுக்கு, தவறான விமர்சனங்களைப் பொருட்படுத்த வேண்டாம். கலைத் துறையினருக்கு, பயணங்களால் பலன் உண்டு. அரசியல்வாதிகளுக்கு, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியும். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய பயம் நீங்கும். குழப்பம் நீங்கித் தெளிவுடன் பாடங்களைப் படித்து வெற்றிபெறுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 3
பரிகாரம்: அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் தனஸ்தானத்தை குரு பார்ப்பதாலும் தனாதிபதி புதன் சஞ்சாரத்தாலும் பணவரவு அதிகரிக்கும். அறிவுத்திறன் வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் வரும். வியாபார வளர்ச்சிக்குப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் தாய்வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறும்.
கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களுக்காக உங்கள் நேரத்தைச் செலவிடுவீர்கள். பெண்களுக்கு, எடுத்த காரியத்தைச் செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். கலைத் துறையினர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகளுக்கு, புதிய பதவிகளைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு, பாடங்கள் படிப்பது மனத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தென்மேற்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 3, 6
பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று நவக்கிரகத்தில் சுக்கிரனுக்குத் தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரவு கூடும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியை குருவும் சனியும் பார்ப்பதால் புகழ், கௌரவம் கிடைக்கும். உங்கள் ஆலோசனைகள் பிறருக்கு உதவும். தைரியம் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமை செய்வது குறித்த ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் கூறிய வேலையைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் ஒத்துழைப்பு இருக்கும்.
கணவன், மனைவிக்குள் மனவருத்தம் குறையும். வாகனங்களால் செலவு இருக்கும். பெண்களுக்கு, உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினருக்கு, எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு, செயல் திறன் கூடும். மாணவர்களுக்கு, பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: புதன்கிழமை அன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வணங்க வேண்டும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சந்திரனின் சஞ்சாரத்தால் மனத்தில் தெளிவு உண்டாகும். பயணம் லாபகரமாக இருக்கும். புதிய வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில், வியாபாரம் தொடர்பில் பயணங்கள் இருக்கும். வியாபாரச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும்.
குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். கணவன் மனைவிக்குள் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாகும். பெண்களுக்கு, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு, விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்மை கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 6
பரிகாரம்: சரஸ்வதி தேவியை பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சூரியனின் பாதசார சஞ்சாரத்தால் எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். கடிதப் போக்குவரத்தால் தொழில், வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள்.
எதிலும் திட்டமிட்டுச் செயலாற்றுவதால் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம். பெண்களுக்கு, பணவரவு அதிகரிக்கும். கலைத் துறையினருக்குத் திட்டமிட்டுச் செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு, மனக்குழப்பம் அகலும். மாணவர்களுக்கு, எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனத்தில் தோன்றும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, வடக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், நீலம்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையன்று சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் சுகஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களின் கூட்டணியால் வாகனச் செலவு உண்டாகும். மனத்தில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் தடுமாற்றம் வேண்டாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயல்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணை பலவிதத்திலும் உதவுவார். உறவினர் வருகை இருக்கும்.
அனுபவப்பூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு, மனத்தில் மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். கலைத் துறையினருக்கு, உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு, பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றிபெற உதவும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, சிவப்பு
எண்கள்: 3, 5, 9
பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதைரியம் உண்டாகும்.