சித்திரப் பேச்சு: அகோர வீரபத்திரர்

சித்திரப் பேச்சு: அகோர வீரபத்திரர்
Updated on
1 min read

ஓவியர் வேதா

ஆஜானுபாகு வான தோற்றத்தில் முறுக்கி விடப்பட்ட மீசையும் கண்களில் காணப்படும் கோபமும் மிகவும் அச்சத்தைத் தருகின்றன. கையில் வில் அம்பு, மான் மழு, பாசம் அங்குசம், வாள், கேடயம் என்று ஆயுதங்களைத் தாங்கிய கரங்கள்.
ஆங்கில சரித்திரத் திரைப்படங்களில் காணப்படுவது போல கவச வீரனின் கையில் நீண்ட வாளைப் பிடித்திருக்கும் கரத்தை முழங்கைவரை மறைத்தபடி வாளோடு சேர்ந்து காணப்படும் கவசம் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது.

தட்சனின் மார்பில் புகுந்து மறுபுறம் வெளிப்பட்டுள்ள வாளின் கூர்மை கல்லில் தெரிகிறது. பாதக்குறடுகளும் திருவாசியும் ஆடை ஆபரணங்களும் நுணுக்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கோவை திருப்பேரூர் தலத்தில் உள்ள அகோர வீரபத்திரர் சிலை இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in