

ஓவியர் வேதா
மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கும் இச்சிலையின் கம்பீரம், இடுப்பை வளைத்து, வலது காலை முன்னே வைத்து நிற்கும் பாங்கே தனிதான். இவளது ஆடை ஆபரணங்களில் தெரியும் தனிச்சிறப்பு, கல்லில் இப்படிக்கூட வடிக்க முடியுமா என்று அதிசயிக்க வைக்கிறது.
இந்த வீணை வாசிக்கும் பெண்ணை கலைவாணி என்றும் கூறுகின்றனர். தோளில் அமர்ந்திருக்கும் கிளி, அம்மன் காதில் பேசிக் கொண்டிருக்கும் அழகைப் பார்க்கும்போது இவள் ஏன் மாதங்கி தேவியாய் இருக்கக் கூடாது?