சித்திரப் பேச்சு 01: எண்கை விநாயகர்

சித்திரப் பேச்சு 01: எண்கை விநாயகர்
Updated on
1 min read

நடனமாடும் விநாயகரை நாம் பார்த்திருக்கிறோம். இவர் அவர்களில் வித்தியாசமானவர். எட்டுக் கைகளுடன் செம்மையான உடற்கூறுடன் செதுக்கப்பட்ட விநாயகர் இவர்.

கஜமுகாசுரன், போரில் தோற்று மூஞ்சுறு வடிவம் எடுத்துத் தப்பியோடிய போது, விநாயகர் தாவிக்குதித்து அவன் மீது ஏறி நடனமாடியதாக ஒரு கதை உண்டு. அந்த நடனத்தின் அத்தனை அம்சங்களும் இந்தச் சிற்பத்தில் உண்டு.

தந்தையைப் போலவே சிறப்பாக நடனமாடுபவர் விநாயகர் என்று ஆதிசங்கரர் தனது கணேச புஜங்கத்தில் குறிப்பிடுவதை நிரூபிக்கிறது இந்தச் சிற்பம். கோவை திருப்பேரூரில் உள்ள சிற்பம் இது.

- ஓவியர் வேதா
தொடர்புக்கு: vedhaa.art@gmail.com

​​​​​​​தமிழகக் கோயில்களில் உள்ள தெய்வச் சிலைகள், கடவுளர் அல்லாத பிற சிற்பங்களைப் பற்றிய ஓவியரின் பார்வையிலான அறிமுகத்தோடு கூடிய ஓவியத்தொடர் இது. விநாயகரிலிருந்து தொடங்கு கிறார் ஓவியர் வேதா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in