செய்திப்பிரிவு

Published : 29 Aug 2019 10:37 am

Updated : : 29 Aug 2019 10:37 am

 

வார ராசி பலன்கள் ஆகஸ்ட் 29 முதல் செப் 04 வரை (துலாம்  முதல் மீனம் வரை)

weekly-astrology

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகளைச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வதால் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவார்கள். உறவினர்களின் வருகை இருக்கும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாகப் பேச வேண்டும்.

பெண்களுக்கு, எதிலும் சாமர்த்தியமாகச் செயல்பட்டு காரியவெற்றி பெறுவீர்கள். தாய்வழியில் அரவணைப்பு இருக்கும். கலைத் துறையினருக்கு, அனைத்து விஷயங்களிலும் லாபம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, புதிய வாய்ப்புகள் ஏற்படும். சகோதரர் வகையில் லாபம் உண்டு. மாணவர்களுக்கு, செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, நீலம்
எண்கள்: 4, 6, 9
பரிகாரம்: சரஸ்வதியைப் பூஜித்து வர அறிவுத் திறமை அதிகரிக்கும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்குவன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது நிதானமாகப் பேசவேண்டும். பயணங்களின்போது கவனம் தேவை. அக்கம்பக்கத்தவரிடம் சமாதானமாகச் செல்ல வேண்டும்.

எச்சரிக்கை அவசியம். பெண்களுக்கு, திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, எதிர்ப்புகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
திசைகள்: வடக்கு, மேற்கு
நிறங்கள்: சிவப்பு, நீலம்
எண்கள்: 3, 6, 7
பரிகாரம்: பைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்குவன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது நிதானமாகப் பேசவேண்டும். பயணங்களின்போது கவனம் தேவை.

அக்கம்பக்கத்தவரிடம் சமாதானமாகச் செல்ல வேண்டும். எச்சரிக்கை அவசியம். பெண்களுக்கு, திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, எதிர்ப்புகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
திசைகள்: வடக்கு, மேற்கு
நிறங்கள்: சிவப்பு, நீலம்
எண்கள்: 3, 6, 7
பரிகாரம்: பைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுப்பதில் தாமதம் இருக்கும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். பூர்விகச் சொத்துக்களில் பிரச்சினைகள் தீரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு விலகும். உத்தியோகத்தில் எச்சரிக்கையுடன் வேலைகளைச் செய்ய வேண்டும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் சென்றால் அமைதி திகழும்.

பெண்களுக்கு, எந்தவொரு வேலையையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் மனத்தைக் குவித்துக் காரியமாற்ற வேண்டும். கலைத் துறையினருக்கு, ஒப்பந்தங்களில் தாமதம் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு, கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: கிருஷ்ண பகவானை வழிபட்டு வர எல்லாக் கஷ்டங்களும் நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். எல்லாவற்றிலும் தாமதப்போக்கு இருக்கும். மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் முகத்துக்கு நேராக எதிர்க்காமல் அனுசரித்துச் செல்ல வேண்டும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரம் மெத்தனமாகக் காணப்பட்டாலும் பணவரவு இருக்கும்.

கணவன் மனைவிக்குள் தேவையேயில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளால் திடீர்ச் செலவு உண்டாகலாம். பெண்களுக்கு, யாரிடமும் முரண்படாமல் அனுசரித்துச் செல்ல வேண்டும். கலைத் துறையினருக்கு, வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு, புதிய பொறுப்புகளைச் சிறப்பாகக் கையாள்வீர்கள். மாணவர்களுக்கு, விளையாட்டுப் போட்டிகளில் வெல்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, மேற்கு
நிறங்கள்: வெள்ளை, பச்சை
எண்கள்: 5, 6, 9
பரிகாரம்: சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லாத் தடங்கல்களும் நீங்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் அனைத்து கிரகங்களும் உங்களுக்கு அனுகூலமாக இருக்கிறது. எதிலும் சாதகமான நிலை காணப்படும். பணவரவு அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும், புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள்.

பெண்களுக்கு, உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த பணம் வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்துடன் உரசல்கள் சரியாகும். மாணவர்களுக்கு, கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்குப் பாராட்டுக் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 3, 5, 7
பரிகாரம்: வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவுவதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வச் சேர்க்கை உண்டாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

Weekly astrologyவார ராசி பலன்கள்துலாம்மீனம்ராசி பலன்ஜோதிடம்ராசி பலன்கள்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author